பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வாழும் கவிஞர்கள் கட்டுவதற்கு இடந்தரவில்லை. ஒவ்வோர் உணர்ச்சியிலுமுள்ள ५:#* பல்வேறு வகைகளையும் இவற்றைக் கொண்டு காட்டுதல் இயலாது. ஆதலால் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பல்வேறு பாவினங்கள் தோன்றின. இவை ஒவ்வொரு பாவுடனும் சேர்ந்து பல்வேறு பாவிகற்பங்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றுள் விருத்தமே மிகச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கின்றது. இன்று வாழும் மிகப் பெரும்பாலான கவிஞர்கள் அனைவருக்கும் இதுவே கை வந்த கலையாகி விட்டது.இதையே பொதுமக்களும் கேட்க விரும்புகின்றனர். பிற்காலத்தில் கும்மி, சிந்து போன்ற யாப்பு வகைகளை, இராமலிங்க சுவாமிகள், பாரதியார், பாரதி தாசன், கவிமணி போன்ற கவிஞர்களும் மேற்கொண்டு பல அரிய பாடல்களை எழுதிப் பெரும்புகழ்பெற்றனர்.இதற்கு முன்னர் இவை சித்தர்பாடல்களில் இடம் பெற்றிருந்தன. ஒலிநயம் டோலன்றி யாப்பு:செயற்கையாகப் புனையப் பெற்ற ஒரு சாதனமே. ஆனால் அதன் அடிப்படையில் ஒலிநயம் இருப்பதால் அஃது உணர்ச்சி நிலையைப் புலப்படுத்தும் நல்ல கருவியாகவும் அமைகின்றது. உரை நடையில் அமையும் சொற்களுக்கும் பாட்டில் அமையும் சொற்களுக்கும் வேற்றுமையுண்டு. முன்னவை உணர்ச்சிச் சிறப்பு வேண்டாதவை. யாப்பின் தொடர்பு இல்லாதவை. பின்னவற்றிற்கு உணர்ச்சி வளம் வேண்டும். யாப்பு அமைதியும் வேண்டும். எல்வளவு எளிய சொற்களால் பாடப்பெற்ற பாட்டேயாயினும் உரைநடைக்கும் பாட்டிற்கும் மலையனைய வேறுபாடுண்டு. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியாரின் பாடலில் எளிய சொற்களே உள்ளன. எனினும் அவை உணர்ச்சிக்கும் யாப்புக்கும் ஏற்றவாறு அமைந்து விளங்குவதைக் காணலாம்.