பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 வாழும் கவிஞர்கள் அன்பொடு ஆர்வமும் அறநெறி ஆற்றலும் அளித்திடும் அருமறை குர்ஆன் பண்பொடு பல்நிகர் பாசமும் கொண்டிடப் பகர்ந்திடும் துமறை குர்ஆன் என்ற பாடல் பாசத்துடன் இதைப் பகரும். இது பகர்வதைச் சுருக்கமாகக் கூறினால் சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் என்பவையாகும். கவிஞர் காவடிச் சிந்து பாணியிலும் பாடுகின்றர். வகையொடு வாழ்ந்திட வளமெலாம் சூழ்ந்திட வாழ்நெறி தொலைந்திடக் கண்டு - பழி தாழ்நெறி தொலைந்திடக் கண்டு - பழி பகையொடு பாவமும் பஞ்சமா தீமையும் நீக்கெனக் காட்டுவதால் - நல்ல நோக்கமே காட்டுவதால் - வல்ல புருகான் மறைதனைப் போற்று கின்றேன் - தீனில் செறிவாம் நிறையெனச் சாற்று கின்றேன் (புருகான்-குர்ஆன், தீன்-இஸ்லாம் நெறி) இந்தக் காவடிச் சிந்து கவிதை வேதமாய் வந்து விளக்கென நின்று ஞான நெறியைக் காட்டுகின்றது. r ‘எரு' என்ற சிறு தலைப்பின் கீழ் இந்துக்கள் போலவே இஸ்லாமியர்கள் திருத்தலப் பயணம் என்ற புனித யாத்திரையை ஆண்டு தோறும் தொடங்குகின்றனர். மெக்காவுக்குச் செல்லுகின்றனர் எனப் பாடுகிறார். இனியதோர் இஸ்லாம் ஏந்தெழிற் கடமையில் நனிசிறந் ததுவே புனிதமார் யாத்திரை அணியொடு ஆட்பொருள் ஆண்டிடும் தீனோர் மணிநிகர் மக்கமா நகர்செலல் நன்மையே மேலும், இஸ்லாமியர்கட்கு நோன்பு மிக முக்கியமானது. இஃது உடலையும் ஆன்மாவையும் தூய்மையாக்குகிறது. இது அவர்களது நம்பிக்கை. பிறை கண்டு நோன்பினைத் துவக்குவது அவர்தம் கடைபிடிப்பு என்பதையும் கூறுகிறார். உயிரோட்டம் பெற்றவொரு உடலென்னும் கருவிதனைப் பரிசுத்தம் செய்து கொள்வோம் உவப்பொடுநாம் விரதத்தை ஏற்றுக் கொள்வோம் என்ற கவிதை இதனைத் தெளிவுறுத்துகின்றது. தொழுகையும் இஸ்லாமியர்கட்கு இன்றியமையாத