பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. ஜெய்புன்னிஸ்ா 237 இல்லையென ஏங்குகின்ற ஏழை யர்க்கே இயன்றவரை உதவுகின்ற இரக்கம் வேண்டும் தொல்லையிலா நல்வாழ்வு வேண்டும் என்றால் - தொடர்ந்திந்த நல்லாட்சி தன்னை ஏற்போம் தன்மதிப்புத் தன்மானம் தகைசி றந்த தாயகத்தில் புகழ்காக்க உரிமை யுண்டு அன்றாடம் ஆற்றுகின்ற அருங்க டன்கள் அருந்தமிழர் வாழ்வுயர உரிமை யுண்டு பிறருக்குச் சேவைகளைச் செய்வ தற்கே பிறப்பெடுத்தோம் பேருண்மை துறந்த துண்டோ திறனாய்ந்த தொண்டர்களைத் தேர்ந் தெடுத்தே தினந்தினமும் உழைப்பதைநாம் வெறுத்த துண்டா? மறனாய்ந்த மாத்தமிழர் மானங் காக்க மாநிலத்தே தொடர்ந்திந்த ஆட்சி ஏற்போம். இதில் நல்லாட்சியை ஏற்படுத்த உறுதி கொண்ட மாத்தமிழர் மனநிலையைக் காட்டுகின்றார். "உருவிலே தரு'என்ற பகுதியில் கவிஞர் 'சாந்தி வயலைக் காட்டுவார். நெல்விளைக்க நமக்குவயல் இருக்கு மாயின்- அதை நெல்வயலாய்ப் பெயர்சூட்டி அழைப்ப துண்டு நெஞ்சமெலாம் சாந்திவயல் ஆகி விட்டால்- நல்ல தேசமெலாம் பாசமெலாம் நிலைத்து வாழும் நெஞ்சத்தில் சாந்தி வழி நிறைந்து விட்டால் அது சொர்க்க வழியாகத் திகழ்தல் கூடும் என்கின்றார். சாந்தி வழியைக் கண்டறிந்தவர் நபிகள் நாயகம். இதனை, சத்தியத்தின் நித்தியமே எத்திசையும் ஏற்றமுற சன்மார்க்கம் தோற்றுவித்த மேதை-தரும் சாந்திவழி ஏந்திவரும் பாதை. கல்லடிகள் கண்டபோதும் பல்லுடைந்து நின்றபோதும் எல்லையற்ற தொல்லையேற்ற இனியர்-இந்த இஸ்லாத்தைக் காக்கவந்த புனிதர் - சொந்த சுயநலத்தை விட்டொழித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்டு இனியமதம் நமக்களித்த ஏந்தல் - மக்கள் ஏற்றமுறச் சாற்றுகின்ற வேந்தர் என்ற கவிதைகளில் கண்டு மகிழலாம். இந்தத் தீன் நெறியை இஸ்லாம் மார்க்கத்தை நுவல்வது குர்ஆன்,