பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 வாழும் கவிஞர்கள் விண்மீன்கள் விளங்குமெழில் மண்ட லத்தை வலம்வரவே ஒரேழு வினாடி போதும் கண்மூடித் திறப்பதற்குள் ககன மீது காட்டினர் அதிசயங்கள் அளவில் லாது இத்தனையும் போதாதென்று உணர்ந்த பின்னே இளைப்பாற இடம்தேடித் திங்கள் செல்வீர் மெத்தஉயர் மேகத்து மீது முள்ள மோனவெளி கோள்களிலும் ஆய்வு செய்வீர் என்று கூறி மனிதன் கண்டறிந்த அறிவியல் நுட்பங்களையெல்லாம் பாராட்டிவிட்டு நித்தமுமே ஆராய்ச்சி செய்துயிரின் நித்தியத்தை நும்மாலே அறியக் காணிர் அத்தனையும் வீண்போகா வெற்றி கொள்வீர் ஆயினும்றும் மனத்திலொரு அமைதி யுண்டோ? என்று ஒரு வினாவை நம்முன் வைக்கின்றார். இல்லை என்ற விடை அதில் தொனிக்கின்றது. அம்மையாரின் மற்றொரு தொகுப்பு திசம்பர் 1986) சமாதானப் பயிர் என்பது. இத்தொகுப்பும் சாந்தி வயலைப்போல் கலையுணர்வுடன் கண்டவர் மெச்சும் பாங்கில் அமைந்துள்ளது. அனைத்துலக அமைதி ஆண்டின் நினைவாக வெளிவந்துள்ளது. இதிலுள்ள கவிதைகளும் சாந்தி, சமாதான சமரச நன்னோக்குடையவை. கவிஞரின் கவிதைத் தொகுதியில் பிறிதொன்று சகோதரத்துவ விளைச்சல் என்பது. கலையுணர்வு இயல்பாக அமைந்த இறைநகர் மாமணி இந்த நூலில் உள்ள கவிதைகளை இயல்பு, இணைப்பு, பொறுப்பு. சிறப்பு என்ற நான்கு பெரும்பகுதிகளாகவும் ஒவ்வொன்றும் மூன்று சிறு பகுதிகளாகவும் அமையும்படிப் பாடியுள்ளார். பொதுவாக இறைநகர் மறைமணி பாடாத பொருளில்லை. இவர்தம் மூன்று நூல்களின் பொருளமைப்பு:அற்புதமாக அமைந்துள்ளது. அரசியல், அறிவியல் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. நாட்டுப்பற்று, மொழிப் பற்று, உரிமை வேட்கை, நீதி குன்றாமனம், இறைப்பற்று முதலிய அத்தனையும் இந்தக் கலைமாமணி கொண்டிருப்பதால் இவர்தம் கவிதைகள் உள்ளத்தைத் தொடுவதாக அமைந்துள்ளன. இவர்தம் தமிழ்ப்பற்று சங்ககாலப் பெண்புலவர்களின் பற்றினை நிகர்த்ததாக உள்ளது. அவரவர்க்குத் தாய்மொழியே கருப்பஞ் சாறு அகமுறையும் அன்னைமொழி விரும்பும் சோறு என்ற இவர்தம் வாக்கு பாவேந்தரின் தமிழ் உணர்வுகளை நினைவு கூர்வதாக அமைந்து படிப்போரை மகிழ்விக்கின்றது என்று கூறி இவரின் கவிச்சிறப்பைத் தலைக் கட்டுகின்றேன்.