பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழ. கதிரேசன் 245 என்ற பாடல்கள் பழமையும் புதுமையும் என்ற தலைப்பில் காணப் பெறுபவை. இவற்றில் முதற் பாடல் ஊன் உடம்பு ஆலயம் என்ற திருமூலர் கருத்தை நினைவு கூரச் செய்கின்றது. பெருமை சேர்ப்போம் என்ற தலைப்பில் வரும், பெண்ணைக் கொடுத்தது போதாமல் பெரும்பொருளும் பேசிக் கொடுக்கின்றார் அள்ளிக் கொடுத்த பின்னாலும் அதிகம் ஆசைப்படு கின்றார். பின்முறை கேட்டு வாவென்றே பிறந்த வீட்டுக்கு அனுப்புகின்றார் கண்ணுக் கழகாய்ப் பெண்ணிருந்தும் காசைத் தானே பார்க்கின்றார். ஆணும் பெண்ணும் பெற்றவர்க்கு அடிமை யின்மை காணுங்கள் பேரம் பேச விலைப்பொருள்ள வெட்க மில்லை கூறுங்கள் வரதட் சினைக்கு விலங்கிட்டு வழிய னுப்பப் பாருங்கள் வரலாற் றில்இதை எழுதிவைத்தே வாழ்த்துப் பாவும் பாடுங்கள் என்பவை காலத்துக்கேற்ற தேவையான கவிதைகள். போதையைப் பொசுக்குவோம் என்பது இன்றையத் தேவைக்கு ஏற்ற பாடல்களைக் கொண்டது. புகையே நமக்குப் பகையாகும் - அது புற்றுநோய்ப் பிறப்புக்கு இடமாகும் காற்றைக் கெடுக்கும் வெண்புகையும் - நம் கடமையைக் காற்றில் பறக்கவிடும் கொள்ளியை வாயில் பற்றவைத்து- அதைக் குழந்தையின் முகத்தில் ஊதுவதா? வெண்சுருட் டாலே அடுத்தவர்க்குத்-தினம் வேதனை உண்டு பண்ணுவதா? போதைப் பொருளை இதில்வைத்து புகைப்பதும் உடலுக்கு நன்றாமோ? அடிக்கடி தேநீர் குடிப்பதுபோலே-நாம் அடிக்கடி புகையைப் பிடிப்பதுவோ? மதுவையும் புகையையும் இனிமேல்நம் மனத்தை விட்டே அகற்றிடுவோம்-இவை