பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 வாழும் கவிஞர்கள் உயிரைக் குடிக்கும் ஒருநாளில் என்பதை அனைவரும் உணர்ந்திடுவோம் இந்தப் பாடல்களின் கருத்துக்கள் இளைஞர் உலகத்துக்கு மிகவும் இன்றியமையாதவை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டம்-ஒழுங்கு சரிந்து கொண்டே வருவதைக் காண்கின்றோம். அவலங்கள் என்ற தலைப்பில் இதனைக் காட்டுகின்றார் கவிஞர். சட்டம் இந்த நாட்டினிலே சரிஞ்சு போச்சுங்க - அதைச் சரிப்படுத்த முயலவேனும் தெரிஞ்சு போச்சுங்க நீதி நேர்மை இந்த நாட்டில் குறைஞ்சு போச்சுங்க - அதை விலைகொடுத்து வாங்குவது மலிஞ்சு போச்சுங்க என்று நடப்பு நிலையைக் காட்டுகின்றார். நமக்குச் சிந்தனைத் திறன் இருப்பினும், செயல் திறன்தான் இல்லை என்பதை - சிந்தனைக்கு இந்த நாட்டில் பஞ்சம் இல்லிங்க- அதைச் செயல்படுத்த ஒருவருக்கும் நெஞ்சம் இல்லிங்க. என்பதாகச் சுட்டிக் காட்டிக் சூடும் தருகின்றார். கவிஞனோ, எழுத்தாளனோ தன்னைப் பெற்றெடுத்த நாட்டைக் கை தூக்கிவிட்டுக் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையை உடையவர்கள். இதனால் இவர்தம் கவிதைகள் பெரும்பாலும் சமுதாய நோக்கிலே அமைந்தவை. - "அசலும் நகலும்' என்ற தலைப்பில் ஒரு பாடல் போலிகள் தாலிகள் கட்டிக் கொண்டதால் அசல்கள் கீழே விழுந்து போயின. போலியைக் கண்டு அசலு மிரளுது அசலைப் போலிகள் அடக்கி ஆளுது. போலிக்குத் தானே வேலிகள் இப்போ பேருக்குத் தானே அசல்கள் இப்போ போலியை அசல்கள் பிடித்து விழுங்கனும் பொல்லாத போலிகள் பயந்து நடுங்கனும்