பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முடியரசன் 49 புதியவகை உவமைகள் : பாவேந்தர் புதிய உவமைகளை அமைப்பதில் தனித்திறமை பெற்றவர். அவர் வழி வந்தவராதலால் இவருக்கும் அத்திறமை இயல்பாகவே வந்தமைந்தது. கோழியின் பின்னே செல்லும் குஞ்சுகளை, கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சிதரும் குஞ்சுகள் என்று காட்டுவார். இங்குக் குஞ்சுகளின் உருவத்திற்குத் தாமரை மொக்குகள் அற்புதப் பொருத்தம் ஆகும். ஈண்டுக் கவிதையிலும் தெளிவு. உவமையிலும் புதுமை காண்கின்றோம்.மற்றோர் அற்புதமான உவமை அமைந்த பாடல வருமாறு. சுடர்விட்டுக் காட்டுகின்ற கதிரோன் தோன்றச் சுருக்கவிழ்ந்து சிரிக்குமுகத் தாம ரைக்குள் கடன்பட்ட மாந்தரிடம் வட்டி கேட்கக் கடைதோறும் புகுந்துவரும் கணக்க னைப்போல் இடம்விட்டு மலர்தோறும் சென்று தேனை இனிதுறிஞ்சி இசைபாடிச் செல்லும் தும்பி அடைபட்டுக் கிடக்கவெனக் குவித்துக் கொண்ட அல்லிமலர்க் கூட்டத்துள் அழகு கண்டேன் இங்கு வண்டு இசை பாடித் தேனை உறிஞ்சுகின்றது. மலர்தோறும் சென்று உறிஞ்சும் வண்டுக்குக் கடைதோறும் வட்டி வாங்கும் கணக்கப் பிள்ளை உவமையாக அமைகின்றார். இவரும் ஒருவகையில் உறிஞ்சுபவர்தாம். வண்டு இசை பாடித் தேனை உறிஞ்சுகின்றது. கணக்கப் பிள்ளை வசை பாடி வட்டி பெறுகின்றார். காரைக்குடியில் வாழ்ந்த அடியேனுக்கு இது நன்கு தெரியும். 'எழில் என்ற தலைப்பில் உள்ள பாடல்களும் அழகின் சிரிப்பு என்ற பாடல்களும் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு' என்ற நூலில் உள்ள பாடல்களின் பாணியில் அமைந்து படிப்போரை மகிழ்விக்கின்றன. குழந்தைச் செல்வத்தைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். பாரதியார் குழந்தைகளைப் பிள்ளைக்கனியமுது, பேசும் பொற் சித்திரம், அள்ளி அணைத்திட ஆடிவரும் தேன் என்று உருவகித்து மகிழ்வார். முடியரசனும் இத்தகைய தலைப்பில் பாடியுள்ளார். இதில் தனித்தன்மையைக் காண முடிகின்றது. அனைத்தும் அற்புதமான