பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். கே. இ. 45 s. భీ. . ~-? $ re <) ※ மன்னிய விமானம் எட்டெழுத் தின்கண் மருவுமோங் காரமே என்றும் பன்னரும் ஏழு மதில்களும் மற்றைப் பண்புறும் ஏழெழுத் தென்றும் நன்னய மாக விளங்குதல் கண்டு நான்மறை பூசித்து வாழ்த்தும். கடலினுள் ஆழ்ந்து விருப்புடன் சென்று கையினால் பன்முறை அரித்துச் சுடர்விடு மணிகள் கொணர்ந்துவ குவப்பத் துறையினிற் குவிப்பவர் போலத் திடமுடன் புகுந்து வைணவ உரைக்குள் திகழ்தர நுண்பொருள் வழங்கும் அடலினை வியந்தேன் புலமையாம் செல்விக் கமைந்தநற் றிலகம்இப் பனுவல். இவை இரண்டு பாடல்களும் ஆசிரியரின் திறனாயும் திறனை எடு காட்டுகின்றன. வைணவச் செல்வம் என்ற அடியேனது நூலுக்கு இரண்டு பகுதிகள் பாடல்களைத் திறனாய்வு செய்து சிறப்புப் பாயிரப் பாமாலை ஒன்று வழங்கியுள்ளார். அது பல்வேறுவகை மரபுக் கவிதைகளால் ஆனது. அதில் சில பாடல்கள். செப்பம் மிக்கநம் செம்மலின் நெறியில் திகழும் நீற்றொளியாண்டு பரவலால் ஒப்பற் றோங்கும் வைணவ மார்க்கத்தில் உலாவி வேங்கட மாலருள் எய்தினார் துப்புற்றோங்கும் வைணவ ஞானத்தால் தூய நால்வரின் புனித நெறியினை இப்பு விக்கண் விளக்கிட வல்லவர் இவர்தம் தொண்டு மிகவும் பெரியதால், வேங்கடத் தப்பன் அருளினால் முதுமை விடைகொள இளமையை அழைக்கும் பாங்குறும் இந்த அருங்கலைக் கோன்நம் பாக்கியம் ஒன்றுபட் டதனால்