பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு.வ. நடையைப் பின்பற்றலாம். خ*ټي பெற்றவர்கள் கூடப் பிழையின்றி எழுத கூடு வருந்த வேண்டியுள்ளது. பிழையின்றிப் படித்தற்கும் எழுது தற்கும் பெரும்பாலோர் முயல்வதில்லை இலக்க ணத்தை துழைப்பதற்கு மூளையிலே இடமும் இல்லை தொண்டியென வாசகத்தை எழுது கின்றார் அழைத்துவந்து தமிழறிவைப் புகுத்த வேண்டும் அழகுதமிழ் நடைசிறக்க உழைத்தல் வேண்டும் பிழையில்லாச் செந்தமிழைப் பெருக்க வேண்டும் பேருலகில் தமிழ்முழுக்கம் எழுப்ப வேண்டும் ாற பாடல் இதற்கு வழி வகுக்கின்றது. இலக்கணத்தும் இலக்கியத்தும் பெரும்புலமை எய்தி எழிற்றமிழைக் கொழிக்கின்ற வல்லமையைப் பெற்றுக் கலக்கமற்ற திறனறிவு வாய்ந்திருக்கும் நிலையில் கணக்குடனே விஞ்ஞானத் தொழிற்கல்வி கற்றோன் வலக்கையைப் பெற்றபயன் பெற்றவனாம் இந்த வையத்தின் மேன்மைக்கும் அச்சாணி ஆவான் மலர்க்குவியல் தருமழகு மல்குவிக்கும் சொற்கள் வழங்கிடுவான் விஞ்ஞானத் துறையெல்லாம் அவனே என்ற பாடலும் இதே பாணியில் செல்கின்றது. இப்படி மொழிவளத்தைப் பெருக்கவேண்டும் என்று நுவலும் பாடல்கள் பல உள்ளன. தமிழ்தாடு: தமிழ்நாட்டை உலகப் பெரும்புகழ் பெற்ற நாடாக்க வேண்டும் என்ற கனவும் இக்கவிஞருக்கு உண்டு. இந்நாட்டுப் பற்று மிக்க கவிஞரைப் பளிங்குபோல் பல பாடல்கள் காட்டுகின்றன. தாற்றங்கால் நடுகின்ற போதிலொரு பாட்டு நன்குபயிர் வளர்ந்தபின்னே அறுவடைக்கோர் பாட்டு ஏற்ற நீர் இறைக்கின்ற போதிலொரு பாட்டு ஏரியிலே தோணிவிடும் போதிலொரு பாட்டு மாற்றலர்மேல் படையெடுக்கும் போதிலொரு பாட்டு வாகைபெற்றுத் திரும்பிவரும் போதிலொரு பாட்டு காற்றடிக்கும் போதிலெல்லாம் காதில்விழும் பாட்டு களிபெருக்கும் செந்தமிழ்த்தாய் நாடெங்கள் நாடே