பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

轶前穹霍,药 ضمن ÉS ! பாண்டிய நாட்டில் அந்நாள் பைந்தமிழ்ப் புலவ ரெல்லாம் மாண்டனர் என்றால் சங்க மாண்புநம் முன்னே தோன்றும் மீண்டவர் வந்தார் என்று விளம்பிடப் பாட லைக்கை யாண்டவன் புகழைப் பெற்றோன் பாரதி தாசன் அன்றோ. பாவேந்தரைச் சங்கப் புலவர்களுடன் ஒப்பிட்டுக் காட்டுவது அவர்மீது கவிஞர்நாராநா அவர்கள் கொண்ட அளவற்ற மதிப்பைக் காட்டுகின்றன. பாரதியும் பாரதிதாசனும் பற்றிப் பதினான்கு பாடல்கள் பாடியுள்ளார். பக்தியிலே சக்தியுண்டென் றெண்ணி னாலும் பழமூடப் பழக்கத்தைச் சாடி நிற்கும் மிக்கபுகழ்க் கொள்கையிலே ஊறி நிற்கும் மீசையுள்ள பாரதிக்குத் தாசன் எந்தப் பக்கத்தில் வந்தாலும் மூடப் போக்கைப் பாய்ந்தெதிர்க்கும் வெறியுள்ளான் ஆகை யாலே சிக்கென்று பாரதியைக் குருவாய்க் கொண்டான் சிங்கத்தைப் பின்பற்றும் சிங்க மானான் இருவரும் மீசைப் புலவர்கள் பாரதி முறுக்கு மீசைக்காரர். பாவேந்தரோ தட்டையான அகல இட்லர் மீசைக்காரர். இருவர் தோற்றமும் எடுப்பான வசீகரத்தன்மை வாய்ந்தவை.மூடப் பழக்கத்தையும், மூடப் போக்கையும் பாய்ந்தெதிர்ப்பதில் ஒரே அணியில் நிற்பவர்கள். தந்தை பெரியாரைப் பற்றிப் பல்வேறு தலைப்புகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். கிழச்சிங்கம், வெண்தாடி வேந்தர் பெரியார், வாழ்க, தமிழர் தலைவர், இயக்கமாய் நின்ற எந்தை என்ற தலைப்புக்களில் இவையமைந்துள்ளன. நேரிய ஒழுக்கம் பண்புடைமை - நாட்டில் நிலைபெற் றோங்க வேண்டுமெனும் சீரிய கருத்தை உடையவராம் - கிழச் சிங்கம் பெரியார் வாழியவே!