பக்கம்:வாழும் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

சொல் உலகம்

'பாவம் வாயில்லாப் பிராணி, அதைப் போட்டுக் கொல்கிருன். கடவுள் இவனுக்குத் தண்டனை கொடுப்பார்” என்று பிராணியைத் துன்புறுத்தும் ஒருவனேப் பார்த்துச் சாதுவான ஒருவர் சொல்கிருர். வாயில்லாப் பிராணி என்று அவர் குறிக்கிருரே, அந்த மாட்டுக்கு வாய் இல்லையா? இருக்கிறது. புல் தின்னவும் தவிடு தின்னவும் தண்ணிர் உறிஞ்சவும் வாய் இருக்கிறது. ஆனால், "ஐயோ கொல்கிருனே!” என்று சொல்ல வாய் இல்லே, தன் உள்ளக் கருத்தை வெளியிட அதற்கு வாய் இல்லை.

உலகத்தில் உள்ள எல்லாப் பிராணிகளேயும் உயிர் உள்ளவை, உயிர் இல்லாதவை என்று பிரிக்கலாம். அந்த உயிருள்ள பிராணிகளையும் வாயுள்ள பிராணி என்றும் இல்லாத பிராணி யென்றும் பிரிக்கலாம். வாயுள்ள பிராணி என்று பிரித்தாலும் அந்த வகையில் பல சாதி இல்லே: மனிதனைத்தான் வாயுள்ள பிராணி என்று சொல்ல வேண்டும். மற்ற உயிர்களை வாயில்லாப் பிராணி என்கிருேம். அவற்றில் பல வகைகள் உள்ளன. வாயில்லாப் பிராணிகளில் ஐந்து பிரிவுகள் உண்டு. ஐந்து புலன்களால் உணரும் உணர்ச்சி, மனித லுக்குப் பூரணமாக இருக்கிறது. அதற்குமேல் பகுத்தறிவு ஒன்று தனியாக இருக்கிறது. ஆகையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/10&oldid=645930" இலிருந்து மீள்விக்கப்பட்டது