பக்கம்:வாழும் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - வாழும் தமிழ்

ஆறு அறிவு படைத்தவன் மனிதன் என்று தமிழர் வகுத்திருக்கின்றனர். - -

வாயில்லாப் பிராணிகள் எல்லாவற்றுக்கும் ஐந்து புலன் அறிவும் ஒருங்கே அமைவதில்லை. வள் சிடு யடையும் சக்தியுடைமையால் மரத்தையும் உயிருள்ள பிராணியாகவே தமிழர் கருதினர். அதற்குப் பரிச உணர்ச்சி என்ற ஓர் அறிவு இருக்கிறது. இப்படியே இரண்டறிவு படைத்தவை முதல் ஐந்தறிவு படைத் தவை வரை பிராணிகள் வேறு வேருக உள்ளன். இப்படிப் பார்த்தால், அறிவு வகைப்படி பிரித்து. வாயில்லாப் பிராணிகளே ஐந்து பிரிவு ஆக்கலாம். தமிழர் அத்தகைய முறையில் உயிரைப் பிரித்துப் பேசினர்கள். தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் அதைப்பற்றி விரிவாகச் சொல்கிரு.ர்.

சொல்லதிகாரத்தில் சொற்கள் பொருளைத் தெரி விக்க எப்படி உதவுகின்றன என்றும், அந்தச் சொற். கள் எத்தனே வகைப்படும் என்றும், பல சொல் தொடர்ந்து வாக்கியமாகி நினைத்த கருத்தைத் தெரிவிக் கும் இயல்பு இன்னது என்றும் அவர் விரிவாகச் சொல்கிருர் சொல் அதிகாரம் முழுதும் பொருளைக் குறிக்கும் சொல்லேப்பற்றிய ஆராய்ச்சி நிரம்பியது.

உலகத்துப் பொருள்களில் உயிர் உள்ளது உயிர் இல்லாதது என்றும், உயிர் உள்ளவற்றில் ஒன்று முதல் ஆறுவகை அறிவு வரையில் உள்ளன என்றும் பிரிவு அமைந்திருக்கிறது. சொல்லுலகத்திலோ வேறு வகைப் பிரிவுகள் இருக்கின்றன. வாயுள்ள பிராணி, வாயில்லாப் பிராணி என்று காம் சொல்கிருேமே அந்தப் பிரிவையே, தம் கருத்தைப் புலப்படுத்தும் பிராணி, அது முடியாத பிராணி என்று பிரிக்கலாம். அதையே இன்னும் வேறு விதமாகச் சொன்னல் பகுத்தறிவுள்ள பிராணி, பகுத்தறிவில்லாத பிராணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/11&oldid=645932" இலிருந்து மீள்விக்கப்பட்டது