பக்கம்:வாழும் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் உலகம் 3.

என்று பிரிக்கலாம். ப. கு க் த றி வு இருப்பதற்கு, அடையாளம்போலப் பேச்சு உதவுகிறது. அதனல்

தான் மனிதன் பெற்ற பெருவரம் பேசும் ஆற்றல்

என்று பெரியோர் தெரிவிக்கின்றனர்.

- சொல் என்றதைப்பற்றிய ஆராய்ச்சி வருகையில்

பொருளே உணர்த்தும் வார்த்தை அல்லது மொழி தான் தலேமை இடத்தைப் பெறுகிறது. அதை

உடையவன் மனிதன். மற்ற அனேத்தும்-உயிர் உள்ளவையும் இல்லாதவையும்-ஊமைச் சாதி; பேசக் தெரியாதவை; சொற் பிரபஞ்சத்தில் தாமே இயங்க முடியாதவை.

ஆகவே, சொல் அதிகாரத்தில் முதலில் பிரிக்கும். பிரிவு இரண்டாக அமைந்தது. உணர்ச்சியைச் சொல்லும் ஆற்றல் பெற்ற மனிதன், அது பெருத பிற என்ற இரண்டு வகைகள் அமைந்தன. இந்தப் பிரிவைத் தமிழரிடங்தான் காணலாம் என்று. ஆராய்ச்சியாளர் எழுதியிருக்கின்றனர். -

இந்தப் பிரிவை யார் முதலில் அமைத்தார்கள் என்று காலக் கணக்குப் போட்டுச் சொல்ல முடியாது. மிகப் பழைய காலக் தொடங்கியே அடிப்பட்ட வழக்காக இந்தப் பிரிவு வந்துகொண் டிருக்கிறது. இங்கப் பிரிவுக்குத் திணை என்று பெயர். சொற்: பிரபஞ்சத்தில் சொல்லேச் சொல்லும் அதிகாரம் உடையவன்தானே உயர்ந்தவன்? எனவே, மனிதரை உயர்திணை என்று சொன்னர்கள். உயர்திணை என்று சொன்ன மாத்திரத்திலே இழிதிணை என்று மற்ருென் ஆறுக்குப் பேர் என்று சொல்லத் தோன்றும். தமிழர் அப்படிச் சொல்லவில்லே. மனிதன் உயர்ந்தவன்; ஆல்ை மற்றவை இழிந்தவையா? அல்ல. அவற்றையும் கடவுள் அருளுள்ளங் கொண்டு படைத்திருக்கிரு.ர். அப்படியானல் அவற்றை என்ன தினையென்று பகுப்பது? - o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/12&oldid=645934" இலிருந்து மீள்விக்கப்பட்டது