பக்கம்:வாழும் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

చబీ. வாழும் தமிழ்

உயர்திணை என்று ஒன்றைச் சொல்லிவிட்டோம். மற்றதைத் தாழ்ந்த திணை என்று சொல்லக்கூடாது. ஆலுைம் ஒரு பேர் இட வேண்டுமே!

சரி; கொஞ்சம் இங்தக் காலத்துக்கு வருவோம். அரசாங்கத்தில் உத்தியோக சம்பந்தமான பேச்சு வரும்போது தமிழ் நாட்டில் சாதியைப்பற்றி ஆராய் .கிருர்கள். பிராமணர் என்று ஒரு பிரிவை வகுத்து மற்றப் பிரிவைப் பிராமணர் அல்லாதார் என்று குறிக்கிருர்கள். வடநாட்டிலே முஸ்லிம் என்று ஒரு பிரிவு வகுத்து முஸ்லிம் அல்லாதார் என்று எஞ்சிய தற்குப் பேரிடுகிருர்கள். இப்படியே இங்க அல்லாதார் என்ற சொல் பல பல துறைகளில் பிரிவு வகுக்கிறது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டுக்கே இடமின்றி, 'பொன் இது, மணி இது” என்று வெவ்வேறு இயல்பைக் குறித்துப் பிரிக்கும் கொள்கைப்படி இந்தப் பிரிவு முறை இருக்கிறது. உத்தியோகஸ்தர் - உத்தியோகஸ்தர் அல்லாதார், கெஜட்டில் வருவோர் - அல்லாதார் என்று வழங்கு .கிருர்கள். -

இந்த அன்மைச் சொல்லேயே திணைப் பிரிவில் தமிழர் பயன்படுத்திக்கொண்டனர். மனித சாதியை உயர் திணையென்று பிரித்த பிறகு, மற்றவற்றை இழிந்த திணையென்று சொல்லாமல் அல்லாத திணை என்று பிரித்தனர்; அதில் ஒரு சாதுரியம் இருக்கிறது. அல்லாத திணை என்ருலும் அல்திணை என்ருலும் ஒன்றுதான். இல்லாத பொருள் என்பதும் இல் பொருள் என்பதும் ஒன்றையே குறிப்பது போன்றது இது. அல் என்ற சொல்லும் திணை என்ற சொல்லும் சேர்ந்தால் அஃறிணை என்று வரும்.

உயர்திணை, அஃறிணை என்று உலகத்துப் பொருள்கள் அனைத்தையும் பிரித்திருக்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/13&oldid=645937" இலிருந்து மீள்விக்கப்பட்டது