பக்கம்:வாழும் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் உலகம் 5。

பொருளைச் சுட்டும் சொற்களையும் உயர்திணைச்சொல், அஃறிணைச் சொல் என்று பிரித்தார்கள்.

சொல்லதிகாரத்தின் முதல் சூத்திரம் இந்தத் திணையென்னும் பிரிவைப்பற்றித்தான் சொல்கிறது.

உயர்திணை என்மனர் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனர் அவர் அல பிறவே; ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே. (என்மஞர் - என்று புலவர் கூறுவர். மக்கட் சுட்டுமக்களென்று குறிக்கப்படும் பொருள். ஆயிரு - அந்த இரண்டு. இசைக்குமன் - சொல்லும்.)

'உலகத்தில் மக்கள் என்று சுட்டப்படும் பொருள்களே உயர்திணை என்று வகுத்துரைப்பர் புலவர் மக்கள் அல்லாத பிற பொருள்களே அஃறிணை என்று சொல்லுவார்கள். (பொருளேக் குறிப்பதே. 'சொல்லின் வேலே ஆகையால்) சொற்களும் அங்க இரண்டு திணைகளாக வழங்கும் என்பது இதன் பொருள்.

பொருள்களின் பிரிவு எத்தனை வகை உண்டோ அத்தனை வகையையும் சொல்லிலே காட்ட முடியாது. அது அவசியம் இல்லே என்று கருதினர் தமிழர். பெயரைக்கொண்டு ஒரு பொருளின் வேறுபாட்டை எந்த மொழியிலும் உணரலாம். ஆனல் அது செய்யும் கொழிலேப் புலப்படுத்தும் வார்த்தையைக் கொண்டு அதன் இயல்பை உணர்வது எல்லா மொழி களிலும் முடியாது. இளைஞன் ஒடுகிருன்’ என்று சொல்கிருேம். இளைஞன் என்பது ஒரு பொருளின் பெயர். அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே அவன் அறிவுடைய மனித சாதியைச் சேர்ந்த ஆடவன் என்று தெரிகிறது; இளமையை உடையவன் என்பதுகூடத் தெரிகிறது. ஆனல் ஓடுகிருன் என்று. மட்டும் சொன்னல் பெயரால் தெரிகின்ற அத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/14&oldid=645939" இலிருந்து மீள்விக்கப்பட்டது