பக்கம்:வாழும் தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பான்மையும் சிறுபான்மையும் - 93

இப்படிப் பன்மைக்கும் தலைமைக்கும் சிறப்பு உண்டாகும்போது அதற்கு ஏற்றபடி பெயர்கள் அமையும் வழக்கம் இன்று கேற்று வந்ததல்ல. மிகப் பழங்கால முதற்கொண்டே இருந்து வருகிறது. தொல் காப்பியர் காலத்திலும் இருந்தது. ஆகவே, அவர் அந்தச் செய்தியை இலக்கணமாகச் சொல்லியிருக்கிரு.ர்.

ஒருபெயர்ப் பொதுச்சொல்

உள்பொருள் ஒழியத் தெரியுவேறு கிளத்தல்

தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும்

அஃறிணை மருங்கினும் என்பது அவர் கூறும் குத்திரம்.

“உயர்திணையிலும் அ ஃ றி னே யி லு ம் பல பொருளுக்கும் பொதுவாகிய ஒரு பெயரைத் தலைமை காரணமாகவும் பன்மை காரணமாகவும் தனியே ஒன்றைேடு சேர்த்துச் சொல்லுக’ என்பது இதன் பொருள். a. சேரி என்பது தெருவுக்குப் பெயர். பலர் சேர்ந்து வாழ்வதனால் அப்பெயர் வந்தது. பிறரும் வாழ்வார் உளரேனும் பார்ப்பனச் சேரி என்றல் உயர்திணைக் கண் தலைமைபற்றிய வழக்கு என்று சேவைரையர் உதாரணம்காட்டுகிரு.ர். சேரி என்பது யாவரும் வாழும் தெருவுக்குப் பொதுவாக இருந்தாலும் ஒரு சாரார் சிறப்பாக இருத்தலின் அவரோடு சார்த்திய பெயர் வந்தது. பிற புல்லும் மரனும் உளவேனும் கமுகங் தோட்டம் என்றல் அஃறிணைக்கண் தலைமைபற்றிய வழக்கு என்று உதாரணம் காட்டுவர்.

'இதை இலக்கணத்தில் சொல்ல வேண்டுமா?” என்ற கேள்வி எழலாம்; 'இது அவசியமானதா?” என்று கேட்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/102&oldid=646138" இலிருந்து மீள்விக்கப்பட்டது