பக்கம்:வாழும் தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. வாழும் தமிழ்

இலக்கணம் ஒரு சட்டம். சட்ட நூல்களில் சில பகுதிகள் அநாவசியம் போலத் தோன்றும் மிகை யென்று நினைக்கும்படி இருக்கும். ஆனல் சந்தேகங் களும், சங்கடங்களும் எழும்பும்போதுதான் அந்தப் பகுதிகளின் உபயோகம் தெரியவரும்.

"புளிமூட்டை என்று ஒருவன் சொல்லும்போது அதில் சர்க்கரையும் இருக்கும் என்று எதிர்பார்க்க லாமா? கோதுமை மா ஒரு வீசை தா என்ருல் கடைக்காரன் கலப்பு வேலே செய்யாத யோக்கியனுக இருந்தால் தனியாகக் கோதுமைமாவைத் தான் தருவான். வாங்குகிறவனும் வேறு ஒ ன் ைற. எதிர்பார்க்க மாட்டான். புளிமூட்டை என்ற வார்த்தையாலும் கோதுமை என்ற வார்த்தையாலும் குறிப்பிடப்பட்ட பொருள்களில் கலப்பு இருக்கக் கூடாது. இது மாதிரியே கமுகங் தோட்டம் என்ப திலும் கலப்பே இருக்கக்கூடாது என்று யாராவது நினைக்கலாமல்லவா? புளி மூட்டையில் வேறு பொருள் கலந்திருப்பது குற்றம், திருட்டுத்தனம். கோதுமை மாவில் வேறு மாக் கலந்திருப்பது பித்தலாட்டம். ஆனல் கமுகங் தோப்பில் பிற மரங்கள் இருப்பது இயற்கை, இரண்டு வழக்கையும் ஒன்ருகக் கொள்ளக் கூடாது. ஆதலால் இந்த இலக்கணம் அவசிய மாயிற்று.

'பெயரைக் கொண்டு அந்தப் பொருள் மயமாகவே இருக்குமென்று எண்ண வேண்டாம். வாழ்க்கையில் பெயர் பெறுவதற்கு இ ர ண் டு முக்கியமான காரணங்கள் உண்டு. பன்மைபற்றிச் சிறப்பும் அதல்ை பெயரும் பெறுவது ஒரு வகை. சிறுபான்மை யானுலும் தலைமை பற்றிச் சிறப்பும் பெயரும் பெறுவது ஒரு வகை' என்று இந்தச் சூத்திரத்துக்கு நாம் உரை சொல்வதில் தவறு ஏதாவது உண்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/103&oldid=646140" இலிருந்து மீள்விக்கப்பட்டது