பக்கம்:வாழும் தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘மயங்காதே! . . 99

பெண்ணுக்கும் பொதுவாக அமைந்த சொற்களாக இருந்தாலும் அதில் அமைந்த தொழிலோ பெயரோ குறிப்பிட்ட ஒரு சாராருக்கே உரியதாக இருக்கலாம். அது அந்தப் பொதுமையை நீக்கி ஒன்றையே கொள்ளுவதற்குக் கருவியாக இருக்கும் என்ற கருத்தோடு ஒரு சூத்திரம் சொல்லியிருக்கிரு.ர்.

பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம் மியங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.

'பொதுவாகத் தோன்றிலுைம் பெயரிலும் தொழிலிலும் அந்தப் பொதுமையினின்று பிரிங்து ஒரு பாலேயே குறித்து நிற்பவை யாவும், மயங்குதற்குரியன வென்று சொல்லக்கூடியன அல்ல; சம்பிரதாயத்தைப் பின் பற்றியவை. ஆகையால் தெளிவானவையாகவே கருதுவதற்குரியன என்பது இதன் பொருள்.

இந்தச் சூத்திரத்தின் உரையில் உதாரணங்கள் பல உரையாசிரியர்களால் காட்டப்பட்டுள்ளன.

பெருங்தேவி பொறை உயிர்த்த கட்டிற்கீழ் கால்வர் மக்கள் உளர்’ என்பது ஒர் உதாரணம். அரசனுடைய பட்ட மகிஷிக்குப் பிரசவம் ஆயிற்று. அந்தப் பிரசவ அறையிலே அவள் படுத்திருக்கும் கட்டிற்குக் கீழே நான்கு பேர் இருக்கிருர்கள். இந்தக் காலத்து வாழ்க்கையை மாத்திரம் அறிந்தவர் களுக்கு மக்கள் என்ற பெயர்ச் சொல் ஆண், பெண் இருவரையும் இங்கே குறிப்பதாகத்தான் தோன்றும். ஒரு டாக்டர், ஒரு பணிப் பெண், இன்னும் இரண்டு. பேர் இருக்கலாம். டாக்டர் ஆடவராக இருக்கலாமே” என்று அதற்குக் காரணங்கூடச் சொல்லலாம். ஆனல் அந்தக் காலத்து வாழ்க்கையில் அங்கே ஆடவர் புகுவ தில்லை. ஆகவே, அது பொறையுயிர்த்த கட்டிலாகை யால் அதன்கீழ் இருந்த மக்கள் பெண்களே என்று. நிச்சயம் செய்துகொள்ளலாம். மக்கள் என்ற சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/108&oldid=646152" இலிருந்து மீள்விக்கப்பட்டது