பக்கம்:வாழும் தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 00 வாழும் தமிழ்

ஆணையும் பெண்ணையும் குறிக்கும் பொதுச் சொல்லாக இருந்தாலும், இங்கே ஆங்தப் பொதுமையிலிருந்து

பிரிந்து பெண்களேயே குறித்து கின்றது.

'அரசர் ஆயிர மக்களோடு தாவடி போயினர்' என்பது ஒர் உதாரணம். போர் செய்யப் புகுந்த அரசர் ஆயிரம் பேர்களோடு சென்ருர் என்பது இதன் பொருள். தாவடி போதல் என்பது முறையாக அடியிட்டுத் தாவிச் செல்லுதல் (Maching). இங்கே ஆயிர மக்கள் என்பது பொதுவாகத் தோன்றிலுைம் தாவடி போகும் தொழில் ஆண்களுக்கே அக்காலத்தில் உரியதாக இருந்தமையின் ஆ ட வர் க ளே யே சுட்டியதாகக் கொள்ளவேண்டும். - -

. ." "அந்தக் கோருைக்கு நூறு எருமை இருக் கின்றன’ என்ருல், அவை பால் கறக்கும் பெண் எருமைகள் என்று கொள்வதுதான் சிறப்பு. நூறு எருமைக் கடாக்களே ஒருவர் சேர்த்து வைத்துக் கொள்ளுவதும், அப்படி வைத்திருந்தாலும் அதைச் சிறப்பாக எடுத்துச் சொல்வதும் வழக்கம் அல்ல.

'அரசனுடைய படையில் ஆயிரம் யானைகள் இருக்கின்றன” என்று சொன்னல் அங்கே யானைகள் என்பதற்கு ஆண் யானைகள் என்றுதான் பொருள் செய்ய வேண்டும். பெண் யானைகளைப் போரிலே ஈடு படுத்துவது வழக்கம். அன்று. -

இப்படி . . வழக்கு வழிப்பட்ட செய்திகளைத் தெரிந்து கொண் டு இலக்கியத்தை ஆராய்கிற போதுதான் உண்மை விளங்கும்; இல்லையானல்

மயங்குவதற்கு இடம் உண்டு.

‘ “ ’z:,:.,. அம்முடைய அறியாமையில்ை உண்டாகும் மயக் - கத்தை, நூலின் மேல் ஏற்றிச் சொல்லக்கூடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/109&oldid=646154" இலிருந்து மீள்விக்கப்பட்டது