பக்கம்:வாழும் தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 ஆண்மையும் பெண்மையும்

உலகில் பெரும்பாலான ஜீவராசிகளில் ஆண் பெண் பிரிவு இருக்கிறது. உடம்பின் அமைதியால் இங்கப் பிரிவு அமைந்தாலும், குணங்களிலும் இந்த அமைதி இருக்கிறது. தமிழர் ஆணின் தன்மையை ஆண்மையென்றும், பெண்ணின் தன்மையைப் பெண்மையென்றும் கூறிலுைம், அவ்விரண்டும் வெவ்வேறு குணங்களேக் குறிக்க வழங்குவதும் உண்டு. ஆடவனுகிய ஆணே ஆண்பாலாகவும், மகளாகிய பெண்ணேப் பெண்பாலாகவும் இலக்கணம் வகுக்கிறது. ஆனல் ஆணின் தன்மை என்று கருதும் ஆண்மையையும் பெண்ணின் தன்மையாகிய பெண் மையையும் அவ்வாறு வகுக்கவில்லை. இரண்டு பாலுக்கும் பொதுவாக நிற்கும்; அஃறிணைபோல வாக்கியத்தில் சொல்லப்படும்” என்று சில வார்த்தை களேத் தொல்காப்பியர் எடுத்துச் சொல்கிருர். அப் படிச் சொல்லும் பதினெட்டுச் சொற்களில் ஆண்மை, பெண்மை என்னும் இரண்டும் வருகின்றன.

இந்த இலக்கணத்தை விளக்க வந்த உரையாசிரி யர்கள் ஆண்மை என்பது ஆடவரிடத்திலும் பெண் களிடத்திலும் இருப்பதும், அப்படியே பெண்மை இருபாலாரிடத்திலும் இருப்பதும் இயல்பாதலின் இவ்விரண்டும் இருபாலாருக்கும் பொதுவென்று எழுதியிருக்கிருர்கள். *

- ஆண்ம்ை என்பது குணத்தைக் கருதும்போது ஆளும் தன்மையைக் குறிக்கும். இது ஆண், பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/111&oldid=646159" இலிருந்து மீள்விக்கப்பட்டது