பக்கம்:வாழும் தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1マ எட்டுவித வேறுபாடுகள்

மனிதன் சும்மா இருந்தால் அவனே உயிருடைய வனென்று யாரும் சொல்லமாட்டார்கள். இயற்கை யிலேயே அவனுக்கு உடம்பு, உள்ளம், உரை என்ற மூன்று கரணங்களும் பிற உயிரைக் காட்டிலும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ஆகவே, அவன் செய்யும் காரியங்களும் பலபல வகையில் விரிவடை கின்றன. .

மனிதன் இயங்குகிருன்; அவனுடைய இயக்கம் தொழிலாகிறது. தொழில் விரிய விரிய இடமும் பிற பொருள்களும் விரிகின்றன. முருகன் எழுகிருன்; அதாவது முருகன் என்ற மனிதன் எழுதல் என்னும் காரியத்தைச் செய்கிருன். முருகன் மரத்தை வெட்டி ன்ை. வெட்டுதல் என்னும் தொழில் நடக்க முருகன் மாத்திரம் இருந்தால் போதாது, மரமும் வேண்டும். வெட்டினன் என்ற மாத்திரத்தில் யார் என்ற கேள்வி முதலிலும் எதை என்ற கேள்வி அடுத்தபடியும் எழும். ஆகவே, இப்போது முருகன் என்ற மனிதனும் வெட்டு தலாகிய தொழிலும் மரமாகிய மற்ருெரு பொருளும் வருகின்றன. அந்தத் தொழிலைச் செய்ய முருகனும் மரமும் அவசியம். முருகனைக் காரியத்தை கடத்தும் தலைவன் என்று சொல்லலாம். இதை இலக்கணக் காரர் வினை முதல் என்று சொல்வார்கள். வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/124&oldid=646189" இலிருந்து மீள்விக்கப்பட்டது