பக்கம்:வாழும் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுவித வேறுபாடுகள் 117.

வருகிறது. வேலனைத் தனியே பார்ப்பதைவிட அவனேயும் முருகனையும் சேர்த்துப் பார்க்கும்போது தான் நம் பார்வை விரிகிறது. முருகன் வேலனினும் விரைவாக விறகுக்கு மரத்தை வெட்டுகிருன் என்று. தெரிகிறது.

இப்போது இரண்டு மனிதர்கள் முளைத்த பிற்பாடு ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வேலைகள் இருப்பதைக் காண்கிருேம். அவற்றை ஒப்பு நோக்கு கிருேம். இந்த விறகு முருகனுடையது, அது வேலனது என்ற உரிமை வருகிறது. முருகனது மரம், வேலனது மரம் என்ற வேறுபாடு தெரிகிறது. காரியம், அதைச் செய்யும் மனிதன், அவன் உபயோ கிக்கும் கருவி, அதன் பயன், ஒப்பு நோக்குதல், உரிமை என்று விரிந்த இந்த நாடகம் குறிப்பிட்ட இடத்திலும் காலத்திலும் நிகழ்கின்றது.

இந்த விஷயங்களைக் கண்ணிலுைம் கருத்திலுைம் உணர்ந்துகொள்ளும் நாம், வார்த்தைகளால் வெளி யிடுகிருேம். அந்த வார்த்தைகளுக்கு இலக்கணத்தில் வெவ்வேறு பெயர் கொடுத்திருக்கிருர்கள்.

செயலுக்கு வினை என்று இலக்கணத்திலே பெயர். வினைச் சொல் என்பது தொழிலேக் குறிக்கும். சொல். பொருளைக் குறிக்கும் சொல்லுக்குப் பெயர்ச் சொல் என்று பெயர். பெயர்ச் சொல்லாலே குறிக்கப் பெறும் பொருளானது, ஒரு காரியத்தைச் செய்யும் போது மேலே சொன்ன பிற பொருள்களையும் பயன் படுத்திக்கொள்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/126&oldid=646193" இலிருந்து மீள்விக்கப்பட்டது