பக்கம்:வாழும் தமிழ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தொழில்களின் வகை

தமிழ் நாட்டில் முன் காலத்தில் மூன்று அரசர்கள் தலைமை பெற்றிருந்தார்கள். அவர்கள் முடி அணிந்து கொடிபிடித்து நாட்டை ஆண்டனர் 'முடியுடை மூவேந்தர் என்று அவர்களைப் புலவர்கள் குறிப்பார்கள். முடியில்லாத குறுநில மன்னர்கள் பலர் இருந்தாலும், அவர்களெல்லாரும் ஒவ்வொரு முடி வேந்தரைச் சார்ந்தே நிற்பார்கள். போர் நிகழும் காலத்தில் இந்த கிலே நன்முக வெளிப்படும்.

அரசன் உலகத்து மக்களைக் காப்பாற்றும் தொழில் உடையவன். ஆகையால் காவலன் என்ற பெயர் அவனுக்கு வழங்கும். தம் குடிமக்களேத் காத்தல் ஒன்றையே இரவும் பகலும் எண்ணி யிருப்பது மூவேந்தர் இயல்பு. புரவலன் என்ற பெயரும் காத்தல் தொழில் பற்றியே வந்தது.

ஒரரசன் காட்டைக் காக்கும் தொழிலுடையான். கீழ் உள்ள அதிகாரிகள் அவனுடைய ஆணே தாங்கி அவ்வப் பகுதியைக் காப்பாற்றும் கடமையை உடைய வர்கள். ஒவ்வொரு வீட்டுத் தலைவனும் தன் வீட்டில் உள்ளாரைக் காப்பாற்றும் தொழில் உடையவன். உலகத்தை யெல்லாம் தன் அருளால் காப்பாற்றுவது கடவுள் தொழில்.

உலகில் உள்ள மக்கள் வாழ்வதும் பொருள்கள் செவ்வி பெற அமைவதும் என்ருகக் காப்பாற்றும் திறத்தினுல் அமைகின்றன. த க் க வர் க ளி ன் பாதுகாப்பில் கலம் பெருவிட்டால் உலகமே சீரழியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/132&oldid=646205" இலிருந்து மீள்விக்கப்பட்டது