பக்கம்:வாழும் தமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வாழும் தமிழ்

வேற்றுமையைக் குறித்துச் சொல்லப் புகும் போதே, எட்டாகச் சொல்லாமல், ஏழென்றும், விளியென்றும் தனியாகப் பிரித்துச் சொல்கிரு.ர்.

வேற்றுமை தாமே ஏழென மொழிய விளிகொள் வதன் கண் விளியோ டெட்டே.

“மொழிப’ என்று சொல்கிருர் தொல்காப்பியர். "புலவர்கள் சொல்வார்கள்” என்பது அதன் பொருள். இந்த அமைப்பெல்லாம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழங்கி வந்தன என்பதையும், தமிழ் மொழி மிகப் பழங்காலங் தொட்டே இலக்கண இலக்கிய வளம் பெற்றது என்பதையும் அந்த வார்த்தை குறிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/131&oldid=646203" இலிருந்து மீள்விக்கப்பட்டது