பக்கம்:வாழும் தமிழ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுவித வேறுபாடுகள் 12

என்று கூப்பிடுகிருேம். அப்போது அவன் அழைக்கப் படும் பொருளாக இருக்கிருன் சொல்லும் அதற்கு ஏற்ப மாறுகிறது. இது எட்டாம் வேற்றுமை. ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதைக் குறிக்கும்போது முதல் ஏழு வேற்றுமைச் சொற்களுக்கும் வேலே உண்டு. முதல் வேற்றுமை தொழில் செய்பவனேயும், இரண்டாவது தொழிலுக்கு உட்படும் செயப்படு பொருளேயும், மூன்ருவது கருவியையும், நான்காவது பயனையும், ஐந்தாவது ஒப்பிடும் பொருளேயும், ஆருவது உரிமை பெறும் பொருளேயும், ஏழாவது இடத்தையும் காலத்தையும் குறிக்கின்றன. ஆகவே, . இந்த ஏழும் ஒன்றனோடு ஒன்று தொடர்புடையவை. விளிக்கும்போது பெயர் தன் இயல்பினின்றும் வேறு படுவதால் அதையும் ஒரு வேற்றுமையாகக் கொண்டார்கள். வடமொழியிலும் வேறு சில மொழி களிலும் ஒருவனே அழைக்கும்போது அதற்குரிய அடையாளம் தனியே இருக்கும். 'ஹே ராம’ என்றும் 'ஒ, ராமன்” என்றும் வரும். ஆகையால் அவற்றை முதல் வேற்றுமையிலே அடக்கியிருக்கிருர்கள்.

தமிழிலே விளிக்கும்போது சொல் வேற்றுமை அடைவதால் அதனையும் தனியே ஒரு வேற்றுமை யென்று சொன்னர்கள். ஆனாலும் மற்ற ஏழும் ஒரு வகை; இது தனிவகை என்பதை மறக்கவில்லே.

தொல்காப்பியர் சொல் அதிகாரத்தில் வேற்றுமை களேப்பற்றிய செய்திகளை மூன்று இயல்களில் சொல்லி யிருக்கிருர், அவற்றுள் விளியைப்பற்றித் தனியே ஓரியல் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/130&oldid=646202" இலிருந்து மீள்விக்கப்பட்டது