பக்கம்:வாழும் தமிழ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்களின் வகை 1 27.

வெகுளி, செறல் - உவத்தல், தொகுத்தல் - பிரித்தல் என்ற இரட்டைகள் அங்த வகையைச் சேர்ந்தவை. காதல் என்பது உணர்ச்சி; அதன் விளைவாகிய செயல் உவத்தல். வெகுளி என்பது உணர்ச்சி, அதன் விளைவு செறுதல்,

அறுத்தல், குறைத்தல் என்ற இரண்டு கொழில் களைச் சொல்கின்ருர். சில சமயங்களில் இந்த இரண்டு சொற்களும் ஒரே பொருளில் வழங்கிலுைம், இரண் டிற்கும் வேறுபாடு உண்டு. அறுத்தல் என்பது துண்டித்தல்; சிறிது இழவாமல் வேறுபடுத்தல்' என்று விளக்குகிருர் நச்சினர்க்கினியர். குறைத்தல் என்பது, சிறிது இ ழ க் க வேறுபடுத்தலும் பெருமையைச் சுருக்குதலும் என்று அவர் கூறுவர்.

ங்றுத்தல், அளவு, எ ண் ணு, த ல் என்ற மூன்றையும் வரிசையாகச் சொல்லியிருக்கிருர் தொல் காப்பியர். அவை அளவை வகை. ஆக்கல், சார்தல், செலவு, கன்றல், கோக்கல், அஞ்சல் என்பன வேறு வேறு தொழில்கள். கன்றல் என்பது ஒரு துறையில் நன்ருகப் பயிற்சி பெறுதல். குதினேக் கன்றும்’ என்று உதாரணம் கூறுவர் உரையாசிரியர். சூதாடு வதை அதிகமாகப் பழகி ஈடுபடுபவர் என்பது அதன் பொருள்.

இவ்வாறு வரும் தொழில்களே மூன்று பெரும் பிரிவாகச் சேவைரையர் என்ற உரைகாரர் பிரிக்கிருர். இயற்றப்படுவது, வேறுபடுக்கப் படுவது, எய்தப் படுவது என்ற மூன்று பகுதிகளில் எல்லாத் தொழில் களும் அடங்கும் என்று சொல்கிருர்,

ஒவ்வொரு வேற்றுமையைப்பற்றியும், இன்ன இன்ன வகையில் இந்த வேற்றுமை வழங்கும் என்று தனித்தனியே சூத்திரம் செய்திருக்கிருர் தொல் காப்பியர். அங்தச் சூத்திரங்களால் உலகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/136&oldid=646214" இலிருந்து மீள்விக்கப்பட்டது