பக்கம்:வாழும் தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 28 வாழும் தமிழ்

நிகழும் நிகழ்ச்சிகளே அவர் கூர்ந்து அறிந்திருக்கிருர் என்பது தெரியவரும்.

'குயவல்ை செய்யப்பட்ட குடம், மண்னல் செய் யப்பட்ட குடம்' என்ற இரண்டிலும் மூன்ரும் வேற்றுமைச் சொற்கள் வருகின்றன. குயவல்ை, மண்ணுல் என்பன அவை. சொல் அளவிலே குயவ னுக்கும் மண்ணுக்கும் ஆல் என்ற ஒரே உருபுதான் இணைக்கப்படுகிறது. ஆனல் பொருளிலோ இரண் டுக்கும் ஒரு வகையில் ஒற்றுமையும், மற்ருெரு வகையில் வேற்றுமையும் இருக்கின்றன. குடம் உண்டாவதற்குக் குயவனும் வேண்டும், மண்ணும் வேண்டும்; இது ஒற்றுமை. ஆனல் குயவன் காரியத்தைச் செய்பவன்; மண் உபயோகப்படும் பொருள். மு ன் ன ைத வினைமுதல் என்றும் பின்னதைக் கருவி என்றும் சொல்லுவார்கள்.

ஒடு என்பது மூன்ரும் வேற்றுமையைக் குறிக்கும் அடையாளம். அது வரும் இடங்களில் இரண்டு பேர் வழிகளுக்கிடையே கடக்கும் ஒரு தொழிலேக் காணலாம். ராமனெடு சீதை கானகம் சென்ருள்” என்று சொல்லுகிருேம். செல்லுதல் எ ன் ப து தொழில். அதை ராமனும் சீதையும் செய்கிரு.ர்கள். இருவருடைய தொழிலும் ஒருங்கு நிகழ்வதால் அதற்கு உடன் நிகழ்ச்சி என்ற பெயரை இலக் கணக்காரர் வழங்குவார்கள். இந்த வாக்கியத்தில் ஒரே காரியத்தை இருவர் சேர்ந்து செய்வதைச் சுட்ட, ஒடு என்ற ஆடையாளம் நிற்கிறது இப்படிச் சொல் வதை ஒரு வினேக்கிளவி என்று சொல்லுவார்கள்.

இதில் மற்ருெரு சிறப்பு: ராமனும் சீதையும் போகிருர்சள். ராமனெடு சீதை போனுள், சீதையொடு ராமன் போனன் என்று இரண்டு வகையாகவும் அதே கருத்தைச் சொல்லலாம். ஆனல் இந்த மூன்று வாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/137&oldid=646217" இலிருந்து மீள்விக்கப்பட்டது