பக்கம்:வாழும் தமிழ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்காத பார்வை 133。

அன்ன ளாகிய சானகி இவளென.

அயிர்த்தகத் தெழுவெந்தித் துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவதோர் துயருழந் திவைசொன்னன். -

அநுமன் அதற்கு முன்னலே சீதையைப் பார்த்த: தில்லை. ராமனிடம் விடை பெற்றுக்கொண்டபோது அவன் கூறிய சிதையின் அங்க அடையாளங்களைக் கேட்டுக்கொண்டு வங்தான். அத்தனே மகளிர் கூட்டத்திலும் மண்டோதரி அழகியாகவும் உயர். வுடையவளாகவும் தோன் றி னு ஸ். கண்ணினல் பார்த்த அளவிலே அந்தப் பார்வை சிதையோ என்ற ஐயத்தை உண்டாக்கிவிட்டது. அதனுல் அளவற்ற துக்கத்தையும் அடைந்தான். 'கான் இந்த உலகத்திலே பிறந்த பிறவி வீணாய்விட்டது!’ என்று மனமுடைந்து, அழுங்கினன். 'இவள் சீதையாக இருந்தால் ராமன் புகழ் தொலைந்தது; அவன் பெருமை தொலேங்தது. கானும் தொலைந்தேன். இ ங் த இலங்கையும் தொலேந்தது, ராட்சசர்களும் அடியோடு தொலேங் தரர்கள்” என்று கைங்து சாம்பினன்.

அநுமன் முகக்கண் மாத்திரம் கொண்டு பார்க் கிறவனுக இருந்தால் இங்தத் துயரக்கடலிலே அமிழ்க் திருப்பான். ஆனல் அவன் அகக்கண்ணுலே பார்க்கும். பார்வையைப் பெற்றவன். நோக்காமல் கோக்குபவன். கண்ணே நம்பி ஆராய்வதோடு கில்லாமல் கருத்தையும் கலந்து ஆராய்பவன். இதைக் கம்பர் சொல்கிரு.ர்.

கண்டு கண்ணுெடு கருத்தொடு கடாவினன்.

கண்ணெடு கடாவியபோது அவன் ஐயத்திலும் துயரத்திலும் ஆழ்ந்தான். மேலே கருத்தொடு, கடாவினன் அப்போதுதான் உண்மை புலஞ. யிற்று. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/142&oldid=646227" இலிருந்து மீள்விக்கப்பட்டது