பக்கம்:வாழும் தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34 வாழும் தமிழ்

'சீதை மனிதத் திருமேனி படைத்தவள். இவள் வேறு இயல்பு கொண்டவள்; யrஜாதியோ ராட்சச ஜாதியோ தெரியவில்லை. தவிர ராமபிரான் மேல் உள்ளம் சென்ற காதலேயுடைய பெண்டிருக்கு, மன்மதனக இருந்தாலும் அவ்வுள்ளம் பிறன்பால் செல்லுமோ?’ என்று பார்க்காத பார்வை உதய மாயிற்று. மேலே இன்னும் சில காரணங்களே ஆராய்ந்து உண்மையை உணர்ந்துகொண்டான்.

அவன் பார்த்த பார்வையைக் காட்டிலும் பாராத பார்வையே உண்மையைத் தெளிவுறுத்தியது.

இப்படி ஒரு பார்வை உண்டு என்பதை இலக்கியப் புலவர்கள் உணர்ந்து பல இடங்களிலே சொல்லி யிருக்கிரு.ர்கள். அந்தப் பார்வை கண்ணுலே பார்ப்பதன்று என்பதையும் குறிப்பாகத் தெரிவித் திருக்கிருர்கள். இலக்கணப் புலவராகிய தொல் காப்பியரும் இந்தப் பார்வையைப்பற்றிச் சொல்கிருர், 'நோக்கல் நோக்கம்” என்று அவர் இதனைக் குறிக் கிரு.ர். நோக்கு அல்லாத நோக்கம் என்று அதை விரிக்கவேண்டும்; "பார்வை அல்லாத பார்வை' என்பது பொருள். நோக்கப் பொருண்மை கோக்கிய நோக்கமும், நோக்கல் கோக்கமும் என இரண்டு வகைப்படும். நோக்கிய நோக்கம் கண்ணுல் நோக்குதல்; நோக்கல் கோக்கம் மனத்தால் ஒன்றனே நோக்குதல்: என்று சேவைரையர் இதை விளக்குகிரு.ர். - -

பார்த்தல் என்ற மாத்திரத்தில் கண்ணுலே பார்ப் பதுதான் நினைவுக்குவரும். நோக்குதல் அல்லாத கோக்கம் ஒன்று உண்டு என்பதை இந்தத் தொடர் கினைவுறுத்துகிறது. இலக்கியங்களில் நோக்குதல் என்ற சொல் வரும் இடங்களிலெல்லாம் கண்ணுலே பார்த்தல் என்று பொருள்கொண்டு, அங்கே கண் எங்கே என்று தேடக்கூடாது. கருத்தினலே கருது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/143&oldid=646229" இலிருந்து மீள்விக்கப்பட்டது