பக்கம்:வாழும் தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகராதிக்கும் அப்பால் 44 |

ஆளுக்கு வந்தது. இது சினையிற் கூறும் முதல் அறி கிளவி என்றும் சினையாகு பெயர் என்றும் கூறப்படும். 'தீபாவளிக்குத் துகிலி காலு ஜோடி வாங்கப் போகிறேன்’ என்று மாமனர் சொல்கிருர். துகிலி என்பது ஒர் ஊர். 'பரைஸ் இரண்டு ஜோடி கிடைக் குமா?’ என்று சம்பந்தி கேட்கிரு.ர். பஞரஸ் என்பது காசி. இவர்கள் பேச்சிலே துகிலி, காசி இரண் டையும் ஊரென்ரு நினைப்பது? துகிலி அங்கவஸ்திரத் தையும் காசிப்பட்டையும் அப்படிக் குறிப்பாகச் சொல்கிருர்கள். இயற்கையாக இடத்துக்கு உரிய பெயர் அங்கே உண்டான பொருளுக்கு ஆகு பெயர் ஆயிற்று. இதைப் பிறந்தவழிக் கூறல் என்றும் இட ஆகு பெயர் என்றும் கூறுவர். g

இதற்கு எதிரானது துடைப்பக் கதை. துடைப்பம் என்பது இடத்திலே உள்ள பொருளின் பெயர்; அதைக் காங்குபவனுக்கு அது ஆகிறது. அதைத் தானி ஆகுபெயர் என்று இலக்கணம் கூறும். இத்தகைய விசித்திரமான பல குறிப்புகள் பேச்சினிடையே வருகின்றன. இடையனும் ஏழையும் பிச்சைக்காரனும் பேதையும் இந்த ஆகு பெயர்களேப் பேச்சிலே வழங்குகிருர்கள். ஆனல் ஆகு பெயர்கள் என்ற இலக்கணம் அவர்களுக்குத் தெரியாது. இந்தப் பேச்சிலே குறிப்பு இருக்கிறது; அதில் விசித்திரம் இருக்கிறது. அதில் இத்தனை வகை உண்டு என்று ஆராய்ந்து தெரிந்துகொண்டவற்றை இலக்கணம் என்ற பெயரால் புலவர்கள் சொல்வியிருக்கிருர்கள். தமிழர் வாழ்வை என்ருகத் தெரிந்துகொள்ளா விட்டால் இப்படியெல்லாம் ஆராயவும் வகுக்கவும் முடியுமா? ஆகவே, இலக்கணம் வாழ்க்கைக்குப் புறம் பானது அல்ல என்பதை வற்புறுத்த ஆகு பெயர் இலக்கணமும் ஒரு சான்று என்று சொல்வதில் என்ன பிழை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/150&oldid=646245" இலிருந்து மீள்விக்கப்பட்டது