பக்கம்:வாழும் தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வாழும் தமிழ்

வேறு பிரிவுகளைக் கொள்ளும்படியாக இலக்கணம் செய்தார்.

"இன்றைக்கு என்ன காய்கறி, விருந்துக்கு: என்று கேட்கிருர் சுவை அறியும் நண்பர்.

'வாழை, சேனே, பாகல், பூசணி’ என்று அடுக்கு கிருர் சாப்பாடு போடுபவர். -

வாழைக்காயும் சேனைக்கிழங்கும் பாகற்காயும் பூசணிக்கர்யும் அந்த விருந்துக்கு உபயோகமாகின்றன என்பதைத்தான் அவர் சொல்கிரு.ர். ஆனால் வாழை, சேனே, பாகல், பூசணி என்று சொல்கிரு.ர். இயற்கையாக அங்தப் பெயர்கள் வாழைமரத்தையும், சேனைச் செடியையும், பாகற் கொடியையும், பூசணிக் கொடியையுங்தான் உணர்த்தும். அவற்றிலுள்ள காயையும் கிழங்கையும் இங்கே ஆகு பெயர்களாகி உணர்த்தின. கொடி செடிகள் காய்களே உடையவை. கொடிக்குக் காய் ஒர் உறுப்பு; சினே என்றும் சொல்வர். காய்க்குக் கொடியும் செடியும் ஆதாரம்; அவற்றை முதற்பொருள்கள் என்று இலக்கணக்காரர் கூறுவர். வாழை என்னும் முதற் பொருளின் பெயர் அதில் உள்ள வாழைக்காயாகிய சினேப் பொருளுக்கு ஆகு பெயராய் வந்தது. இதை முதலிற் கூறும் சினை அறி கிளவி என்று கூறுவர் தொல்காப்பியர். கூறப் படுவது முதற்பொருளுக்கு உரிய பெயர் ஆளுல் அறியப்படுவதோ சினேப் பொருள். அதனல் இப்பெயர் வந்தது. நன்னூலார் இந்தப் பெயரைச் சுருக்கி முதலாகு பெயர் என்று வழங்கும்படியாகக் குறிப்பித்தார். -

இந்த முறைக்கு கேர் விரோதம் முதலிலே காம் சொன்ன தலே சமாசாரம். அங்கே ஆள் முதற் பொருள். தல சினப்பொருள். சினையின் பெயராகிய தலே என்பது சினேயை உடைய முதலின் பெயராகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/149&oldid=646243" இலிருந்து மீள்விக்கப்பட்டது