பக்கம்:வாழும் தமிழ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகராதிக்கும் அப்பால் 139

தால் அங்த அழைப்பை அவன் மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொள்கிருன். யாரையாவது வையும்போது கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்கும் அதே சொல், இங்கே மகிழ்ச்சியையும் லாபத்தையும் உண்டாக்குகிறது. -

அகராதியைப் பார்த்தால் துடைப்பம் என்பதற்கு விளக்குமாறு என்றுதான் பொருள் எழுதியிருக்கும். துடைப்பம் விற்பவன் என்று இராது. ஆலுைம் சங்தர்ப்ப விசேஷத்தால் அங்தச் சொல் குறிப்பாக அந்த அர்த்தத்தைத் தரும் என்பதைத் தமிழன் 芝_Gö了重纹封sTGö”。

துடைப்பம் என்ற பெயர் அதை வைத்துக் கொண்டு விற்பவனுக்கு ஆகும் பெயர். ஆகையால் இது இலக்கணக்காரருடைய் ஆகுபெயர் வரிசையில் சேரும். -

ஒரு பெயருக்கு இயற்கையான பொருள் எதுவோ அதைச் சுட்டும்போது அது இயற்கைப் பெயராக கிற்கிறது. அகராதியிலே அதற்கு என்ன பொருள் என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனல் அதற்குப் புறம்பாக வேறு ஒரு பொருளுக்கு ஆகும் பெயர்களே வழக்கத்தால்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை அகராதி கொண்டு தெரிந்து கொள்ள முடியாது; வாழ்க்கையைக் கொண்டுதான் தெரிந்துகொள்ள வேண்டும். -

இந்த ஆகு பெயர்களைக் கொல்காப்பியர் ஒன்பது வகையாகப் பிரித்து, இவற்றைப்போல் வேறு வகையாகவும் வரும் என்று சொன்னர். உரை காரர்கள் அந்த வேறு வகைகளையும் ஒருவாறு தொகுத்துச் சொன்னர்கள். பின்னலே நூல் இயற்றிய கன்னுரல் ஆசிரியர் எல்லாவற்றையும் ஆராய்ந்து பன்னிரண்டு வகையாக்கி அவற்றிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/148&oldid=646241" இலிருந்து மீள்விக்கப்பட்டது