பக்கம்:வாழும் தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வாழும் தமிழ்

அழைப்பதாக இருந்தால் அவ்வளவு சத்தம் போட்டிருக்க வேண்டாம்; ராமா.அ.அ.அ” என்று நீட்டியிருக்கவும் வேண்டாம். அவர் அயல் வீட்டு ராமனே அழைக்கவே அப்படிச் செய்தார்; அவன் துரங்குவான் என்று எண்ணியே அதிகமாக நீட்டினர். அயலில் இருப்பவரை அழைப்பது ஒரு விதம்; தாரத்தில் இருப்பவரை அழைப்பது வேறு விதம். அழைப்பதை விளித்தல் என்றும் சொல்வதுண்டு. இப்போது மலையாளத்தில் அந்தச் சொல் சாதாரண வழக்கில் இருக்கிறது. ஒருவனே முன்னிட்டு அழைப் பதை விளி என்று சொல்வார்கள். அப்படி அழைக்கும்போது அவனுடைய பெயரின் உருவம் வேறுபடுகிறது. ராமன் என்பவனே விளிக்கும்போது அந்தச் சொல், ராமா என்று ஆகிறது. பெண்ணே விளிக்கும்போது, பெண்ணே என்று சொல்கிருேம். இந்த வேறுபாடு, பெயர்ச் சொல்லுக்கு உரிய, வேற்றுமை என்னும் பகுதியில் வருகிறது. விளி வேற்றுமை அல்லது எட்டாவது வேற்றுமை என்று இதைச் சொல்வார்கள். -

முதல் ஏழு வேற்றுமைகளேயும்பற்றி வேற்றுமை இபல், வேற்றுமை மயங்கியல் என்று இரண்டு பகுதிகளில் கொல்காப்பியர் இலக்கணம் சொல்வி. யிருக்கிருர், விளி வேற்றுமையைப்பற்றி விளி மரபு என்ற பகுதி சொல்கிறது. - -

அந்தப் பகுதியில் எந்த எந்தப் பெயர்கள் அழைப்பதற்கு வரும், எவை வருவதில்லை என்று சொல்கிருர் வார்த்தையானது விளிக்கும்போது எப்படி எப்படி மாறுபடுகின்றது என்பதை விரிவாக வகுக்கிரு.ர். -

தம்பி என்ற பெயர் அழைக்கும்போது தம்பீ என்று வருகிறது. கடைசி எழுத்து மாறுபடுகிறது. இது ஒரு வீதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/153&oldid=646252" இலிருந்து மீள்விக்கப்பட்டது