பக்கம்:வாழும் தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்பின் சரித்திரம் 145

அடிகள் என்பது அடிகாள் என்று வரும். இங்கே கடைசி எழுத்துக்கு முந்தின எழுத்து மீண்டது.

முட்டாள் என்பது முட்டாளே என்று வரும் போது கடைசியில் ஏ என்ற எழுத்து வந்து அடைகிறது.

'தம்பி வா என்று ஒரு வேறுபாடும் இன்றி உள்ளடடியே வைத்து அழைப்பதும் உண்டு.

இந்த நான்கில் தனித் தனியே ஒவ்வொன்று வருவதும், இரண்டு மூன்று சேர்ந்து வருவதும் உண்டு.

பக்கத்தில் உள்ளவன் பெயரை உள்ளபடியே வைத்து அழைப்பார்கள். நீட்டாமல் ராம, குமர என்பதுபோல அழைப்பார்கள். தூரம் அதிகமானல் நீட்டுவதும் அதிகமாகும்.

எல்லா வார்த்தைகளும் அழைக்க உபயோகிக்கப் படும் என்றுதான் நமக்குத் தோற்றுகிறது. மனிதனே, பெண்ணே, காடே, மாடே, கீயே, மரமே என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆளுல் இப்படி அழைக்க வராத வார்த்தைகளும் உண்டு; அவை சட்டென்று நமக்கு கினைவுக்கு வருவதில்லை.

ராமன் என்று ஒருவனுக்குப் பெயர். அவனே ராமன் என்று சில சமயங்களிலும், பிறகு அவன் என்று பல தடவையும் சுட்டிப் பேசுகிருேம். அழைக்க வேண்டுமானல் ராமா என்று அழைக் கிருேம். ராமனேயே சுட்டிய அவன் என்ற பெயராலே அவனே அழைக்கலாமா? அவனே என்று அழைக் கிருேமா? இல்லை; ராமன் என்ற பெயர் விளியை ஏற்கும்: அவன் என்ற பெயர் ஏலாது. தான், யான், அவன், இவன், யாவன், அவள், இவள், யாவள்.

வா. த.-10 . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/154&oldid=646254" இலிருந்து மீள்விக்கப்பட்டது