பக்கம்:வாழும் தமிழ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லும் பொருளும் - 151

ஒன்று தனியே இருக்கிறது. தமிழ் அறியாத ஒருவன் காதில், நீர் என்ற சப்தம் பட்டால் அவனுக்கு அந்தச் சொல் மாத்திரம் தெரிய வருகிறது. அது வெறும் சப்த மாத்திரமாக கிற்கிறது. தமிழ் தெரிந்தவனுக்கு அந்தச் சொல்லுணர்வோடு அதன் பொருளும் உணரக் கிடக்கிறது "ஐயோ என்பதும் பாஷை தெரிந்தவனுக்கு மாத்திரம் பொருளே உணர்த்துகிறது. அது தனியான சொல்லுருவத் தைப் பெற்றிருப்பதுதான் காரணம். முனகல் அத்தகையதன்று. எந்த மொழி பேசுபவனக இருங் தாலும் முனகலின் பொருளே உணர்ந்துகொள்வான். அது மொழியின் எல்லையைக் கடந்து, சொல் உருவம் அற்று கிற்கிறது.

சொல் என்ருல் அதற்கென்று ஒர் உருவமும், அதல்ை குறிக்கப் பெறும் புொருளும் இருக்க வேண்டும். பொருள் இருந்தும் சொல் உருவம் பெருதவை, எல்லா மொழிகளுக்கும் பொதுவான முனகல், தும்மல் முதலிய ஒலிகள். -

பொருளின் தன்மையை உணர்தலும் அதற்குக் கருவியாகிய சொல்லின் தன்மையை உணர்தலும் சொல்லினல் உண்டாகும் காரியங்கள் என்பதைத் கொல்காப்பியர் சொல்கிருர். இப்படி நான் சொல்ல வில்லை; மரபு தெரிந்த புலவர்கள் சொல்வார்கள்' என்று முந்தையோர் நெறியையும் சுட்டிக் காட்டுகிரு.ர்.

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மஞர் புலவர். - (பொருண்மை- பொருளின் தன்மை:சொன்மை

சொல்லின் தன்மை; சொல்லின் ஆகும் - சொல்லால் ஏற்படும் என்மனர் - என்று சொல்லுவர்.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/160&oldid=646267" இலிருந்து மீள்விக்கப்பட்டது