பக்கம்:வாழும் தமிழ்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வாழும் தமிழ்

சொல், உருவம் பெற்றுப் பொருளே உணர்த்தும் முறையிலேகூட இரண்டு வகை இருக்கின்றன. "பொறுக்க முடியவில்லையே! என்று சொல்வதும், "ஐயோ!' என்று சொல்வதும் ஒரே வேதனையைச் சுட்டுவதாக இருந்தாலும், முதலிலே உள்ளது தெளிவாக அதை வெளியிடுகிறது; பின் ேைல உள்ளதோ, கேட்பவர்கள் யோசித்துத் தெரிந்து கொள்ளும்படி இருக்கிறது. "ஐயோ!' என்ற வார்த்தைக்கு நேரான பொருள் இன்னதுதான் என்று வரையறையாகச் சொல்ல முடியாது. சந்தர்ப்பத்தைக் கொண்டும் சொல்பவன் நிலையைக் கொண்டும் அதற்குப் பொருள் செய்யவேண்டும், அந்த வார்த்தை கேட்பவருக்குக் கொஞ்சம் வேலை கொடுக்கிறது; அதாவது தெளிவாக விஷயத்தைத் தெரிவிக்காமல் குறிப்பாகத் தெரிவிக்கிறது.

இந்தக் கருத்தை அடுத்தபடியாகத் தொல்காப் பியர் தெரிவிக்கிரு.ர். -

'சொல்லாலே நேரே.வெளிப்படையாகப் பொருளே உணர்த்தும் நிலை ஒன்று: சொல்லின் பொருளுக்குப் புறம்பே அதனோடு தொடர்ந்த குறிப்பில்ை பொருளை உணர்த்தும் கிலே ஒன்று. ஆக இந்த இரண்டு வகை யான நிலைகளில் பொருளின் தன்மை நிற்கும் என்று ஒரு சூத்திரம் சொல்கிரு.ர்.

தெரியுவேறு நிலையலும்

குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப

பொருண்மை நிலையே. குறிப்பினலே பொருள் உணர்த்துதல், சங்கர்ப்ப வேறுபாடுகளால் பல வகைப்படும். ஒருவர் வந்தார்’ என்று சொல்லும்போது வார்த்தைகளைக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/161&oldid=646269" இலிருந்து மீள்விக்கப்பட்டது