பக்கம்:வாழும் தமிழ்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வாழும் தமிழ்

கரியவன், நெடியவன் முதலிய பண்பைச் சுட்டும் பெயர்களும், தங்தை தாய் மாமன் என்ற உறவின் முறைப் பெயர்களும், பெருங்தோளன் நெட்டிமையார் என்ற உறுப்பைப்பற்றி வரும் பெயர்களும், குறிஞ்சி முதலிய திணைகளில் வாழ்பவரைக் குறிக்கும் குறவர் முதலிய பெயர்களும் இந்த வரிசையிலே வருகின்றன.

சிறுவரும் சிறுமியரும் விளையாடும்போது கட்சி சேர்த்துக் கொண்டு ஆடுவார்கள். இதனே இன்றும் பார்க்கலாம். சாரணர் கூட்டத்தில் இந்தக் கட்சி களுக்குத் தனித்தனியே பெயர்கள் அமைந்திருக் கின்றன. பழங் காலத்திலும் விளேயாடும்போது சிறுவர்கள் கட்சி பிரிந்து விளையாடுவதுண்டு. அந்தக் கட்சிகளுக்குத் தனித்தனியே பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களே, 'கூடி வரு வழக்கின் ஆடியற் பெயர்’ என்று தொல்காப்பியர் குறிக்கிரு.ர். இளங் துணை மகார் தம்மிற் கூடி விளையாடல் குறித்த பொழுதைக்குத் தாமே படைத்து இட்டுக் கொண்ட பெயர்கள்’ என்று கச்சினர்க்கினியர் உரை கூறுகிருர்: பட்டி புத்திரர், கங்கை மாத்திரர் என்ற இரண்டு உதாரணங்களேயும் காட்டுகிரு.ர்.

குறிப்பிட்ட எண்ணிக்கையால் பெயர் பெறுவதும் ஒரு மரபு. எண்ணுயிரத்தார், மூவாயிரத்தார், அறுபத்து மூவர், கால்வர் என்ற வழக்கு, குறிப்பிட்ட சில கூட்டத்தினரையே குறிக்கும். இத்தகைய வழக்குத் தொல்காப்பியர் காலத்திலும் இருந்தது.

இலக்கணத்திலே சொல்லும்படியாக அமைய வேண்டுமானல் இந்தப் பெயர்கள் வழக்கில் அடிக்கடி வழங்கியிருக்க வேண்டும். பிறந்த நாட்டைக் குறிக்கும் பெயர்களைத் தமிழர் பெருமிதத்தோடு வழங்கினர். குடிப் பெயரைச் சிறப்பித்தனர். குழுவினல் வந்த பெயரைக் குறித்தனர். தொழிலால் வரும் பெயரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/167&oldid=646279" இலிருந்து மீள்விக்கப்பட்டது