பக்கம்:வாழும் தமிழ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2<s வழக்கு விசித்திரங்கள்

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கென்று எல்லாத் தேசத்திலும் கதைகள் வழங்குகின்றன. ஈச்ாப்புக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் முதலியவை இலக்கியங் கண்ட கதைகள். இவற்றை யல்லாமல் பாட்டிமார் குழங்தைகளுக்குச் சொல்லும் கதைகள் அளவிறந்தன நாடோடியாக வழங்கி வருகின்றன.

இந்தக் கதைகள் பெரும்பாலும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றியனவாகவே இருக்கும். பெயர் மறந்த ஈயின் கதையும், வால் இழந்த குரங்கின் கதையும் போன்ற பல கதைகள் காடோடிக் கதைக் களஞ்சியத்தில் இருக்கின்றன.

கதா பாத்திரங்களாக வரும் விலங்குகள் உலகத்தில் உள்ள விலங்குகளைப் போன்றவை அல்ல. அவை பேசும் அறிவுள்ள மனிதரைவிடச் சாமர்த்திய சாலிகளாகப் பேசும். கம்முடைய ராமாயணத்தில் கூடக் குரங்கும் கரடியும் கழுகும் பேசவில்லையா?

ஒரு குரங்கு மற்ருெரு குரங்கைப் பார்த்துப் பேசினுல் நம்மைப் போலத்தான் பேசும். தன்னைக் குறிக்கும்போது, கான்' என்றும், முன்னலே கின்று கேட்கும் குரங்கைக் குறிக்கும்போது, நீ என்றும் பேசும்.

பேசுகிறவன் தன்னையும் தன்னைச் சார்ந்தவர் 'களையும் குறிக்கும்போது நான் என்றும் நாங்கள் என்றும் பேசுவான். முன்னலே கிற்பவனை நீ என்றும், அவனைச் சேர்ந்தவர்களே நீங்கள் என்றும் சொல்வான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/169&oldid=646284" இலிருந்து மீள்விக்கப்பட்டது