பக்கம்:வாழும் தமிழ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு விசித்திரங்கள் 165。

களாம். காணுவரை இறந்து புறத்து விளையாடும் பருவத்தால் பால் திரிந்த பெண் மகன் என்னும் பெயர்ச் சொல் என்று எழுதுகிருர் கச்சினர்க்கினியர். பிள்ளையென்ற சொல் தனியே வழங்கும்போது இக் காலத்தில் ஆனேக் குறிக்கிறது. பெண்ணு, பிள்ளையா? என்று கேட்கிருேம். அப்பெயர் பெண் என்பதனுேடும் சேர்ந்து, பெண் பிள்ளை’ என்று வழங்குகிறது. இதுபோல் அக்காலத்தில், பெண் மகன்’ என்பது வழக்கத்தில் இருந்திருக்கவேண்டும். சென்னேயில், பயல்கள்’ என்ற சொல்வின் மருஉ வாகிய பசங்கள்’ என்பது இப்படி ஒரு விசித்திர மான முறையில் வழங்குகிறது. தமிழ் நாட்டின் மற்றப் பகுதிகளில் பயல், பயல்கள் என்பவை ஆண்களேயே குறிக்கும். இங்கே, பொம்டளேப் பசங்க என்று பெண்பாவோடும் சேர்த்து வழங்கு கிருர்கள். இது மற்றவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றும். இத்தகைய வழக்குகளில் ஒன்றே, 'பெண்மகன்' என்பது ஆல்ை அது தமிழ்நாடு முழுவதும் பெருவழக்காக இருந்தமையால் தொல் காப்பியர் தம் இலக்கணத்தில் அதைக் கொண்டு வந்திருக்கிருர். -

ஆணைக் குறிக்கும் ஆடு உ என்னும் சொல்லும் பெண்ணேக் குறிக்கும் மகடூஉ என்னும் சொல்லும் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னும் இலக்கிய வழக்கில் இருக்கின்றன. பேச்சு வழக்கில் அவை மறைந்தே போய்விட்டன. அவன், இவன் என்ப வற்றைப்போல அக்காலத்தில் அவ்வாளன், இவ், வாளன், அம்மாட்டான், இம்மாட்டான் என்று சில சொற்கள் வழங்கினவாம்.

அப்படியே அவள், இவள் என்பவற்றைப்போல் அப்பெண்டு, இப்பெண்டு என்ற வார்த்தைகள் வழக்கில் இருந்தனவாம். தொல்காப்பியத்துக்கு உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/174&oldid=646295" இலிருந்து மீள்விக்கப்பட்டது