பக்கம்:வாழும் தமிழ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வாழும் தமிழ்

வதைக் காட்டிலும், அப்படிப் பேசுகிற குரங்கையே உயர்திணை ஆக்கிவிடலாமே!

இவ்வாறெல்லாம் சங்கடங்கள் நேராமல் இருக்கப் பின்னலே வந்த இலக்கணக்காரர்கள் மற்ற இரண்டு இடங்களைப் போலத் தன்மையிலும் உயர் திணை, அஃறிணை இரண்டும் உண்டு என்று இலக்கணம் செய்தார்கள். இலக்கிய அளவில் அந்த இலக்கணம் பொருத்தங்தான். ஆனல் வாழ்க்கை அளவில் .ெ த ல் கா ப் பி ய ர் சொன்னதுதான் பொருத்தம். பேசுகிற பொருள் மனித சாதி ஒன்று தான் என்ற கியதி இருக்கும் வரையில் அந்தப் பொருத்தம் மாறுவதற்கில்லே.

ஆனல் சில விஷயங்களில் வாழ்க்கையிலும், மக்கள் வழங்கும் பேச்சு மாறிக்கொண்டே வருகிறது. தொல்காப்பியர், நான் என்ற வார்த்தை ஒன்று இருப்பதாகவே சொல்லவில்லை. யான்' என்பது தான் அவருக்குத் தெரியும் போலும் பிற்காலத்தில் ‘நான் என்பது வந்துவிட்டது. அப்படியே, ‘நீர்' என்று இப்போது நாம் சொல்லும் சொல் தொல் காப்பியர் காலத்தில், நீயிர் என்று வழங்கி வந்தது. "நீங்கள் என்ற சொல்லும் அவருக்குத் தெரியாததே. பழைய இலக்கியங்களில் நான், நீர், நீங்கள் என்பவை அருமையாகவே வந்துள்ளன. -

'பெண் மகன்’ என்ற வார்த்தை ஒன்று கொல் காப்பியர் காலத்துத் தமிழர் பேச்சில் வழங்கியது. அந்த வார்த்தையில் உள்ள பெண் என்பது பெண்பாலையும், மகன் என்பது ஆணையும் சுட்டும் பகுதிகள். இருப்பினும் அது பெண்களைக் குறிக்க வந்த பெயராம். நாணம் என்ற உணர்ச்சி ஏற்படாமல் வெளியே தாராளமாகப் போய் விளையாடும் பருவத்தி லுள்ள குழந்தைப் பெண்ணே அவ்வாறு குறிப்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/173&oldid=646293" இலிருந்து மீள்விக்கப்பட்டது