பக்கம்:வாழும் தமிழ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு விசித்திரங்கள் 163.

தொல்காப்பியர் உயர்திணக்குத்தான் தன்மை உரியது என்று சொன்னர். ஆனால் கதைகளில் நாயும் கரியும், கான்' என்றும், காம் என்றும் பேசு கின்றனவே! தொல்காப்பியர் இலக்கணம் தவரு? அவர் காலத்தில் இத்தகைய கதைகள் இல்லையா?

- கவனித்துப் பார்த்தால் உண்மையில் பேசுகிறவன்

மனிதன்தான். குரங்கு பேசியதாக அவன் கற்பனை செய்து எழுதி வைத்தான்.

அந்தக் குரங்கு குரங்குதானே? அது கான் என்று. பேசுகிறதே! ஆகையால் நான் என்பது அஃறிணை யிலும் வரும் என்று சொல்வதுதானே கியாயம்?-- இப்படியெல்லாம் கேள்விகள் எழலாம். இங்கே இராமாயணத்தில் ஒரு பகுதி கினேவுக்கு வருகிறது.

இராமன் வாலியை மறைந்து கின்று அடித்தான். கீழே வீழ்ந்த வாலி இராமனைப் பார்த்து, இப்படிச் செய்தது தவறு' என்று வாதிக்கிருன். இராமனே, 'நீ மற்ருெருவன் மனேவியைக் கைப்பற்றியது தவறு' என்று சொல்கிருன், 'இது எங்கள் சாதி வழக்கம். மனித சாதியின் வழக்கத்தை வாணர சாதிக்குப் பொருத்திப் பார்க்கக் கூடாது' என்று வாலி சமாதானம் சொல்கிருன். அப்போது இராமன், “ே வான ரங்தான்; ஆனால் மிருகம் அல்ல. இவ்வளவு பேசுகிருய், கான் செய்தது தவறு என்று வாதிக்கிருய்: இவ்வளவு அறிவு உள்ள உன்னே மிருகமென்று சொல்லக்கூடாது. அறிவுள்ள மனிதனுக்குச் சமான மாகவே கொள்ளவேண்டும். ஆகவே, மிருக உணர்ச்சி யுள்ள குரங்குக்கு உரிய மிருகச் சட்டம் உனக்கு ஒவ்வாது’ என்று சொல்லிக் காரணம் காட்டினுளும்.

குரங்கு பேசுகிறது என்பதை வைத்துக்கொண்டு தன்மையை அஃறிணைக்கும் உரியதென்று சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/172&oldid=646290" இலிருந்து மீள்விக்கப்பட்டது