பக்கம்:வாழும் தமிழ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறு அல்ல 169

கால இலக்கணத்தைப் பார்த்தால் தவறு என்று தான் தோன்றுகிறது. ஆனால் அப்படி அவன் சொல்வதில், அவனுடைய வேகம் புலப்படுகிறது. ‘'வேகமாகச் சாப்பிடுவேன்' என்ற குறிப்பையே அந்த வார்த்தை தெரிவிக்கிறது. எதிர்காலத்துக் குரிய சொல்லால் சொல்வதை இறங்த காலத்துக் குரிய சொல்லால் .ெ சா ல் வ. து வேகத்தைத் தெரிவிப்பதற்காக.

இப்படியே நிகழ் காலத்துக்குப் பதிலாக இந்த காலச் சொல் வருவதும் உண்டு. நடந்துகொண்டு வருகிற ஒருவனே, "சிக்கிரம் வா, அப்பா' என் மூல், 'இதோ வந்துவிட்டேன்’ என்று சொல்கிருன். அவன் வருகிருனே ஒழிய வந்துவிடவீல்லே. ஆலுைம் அப்படிச் சொல்வதிலே அவனுடைய வேகம் தெளிவாகிறது.

இப்படி வரும் பேச்சு, தொல்காப்பியர் காதிலே பட்டது. இது வேகத்தைக் குறிப்பதளுல் சரிதான் என்று அவருக்கு முன்னே இலக்கணம் செய்த ஆசிரியர்களும் சொல்லியிருந்தார்கள். ஆகவே, அவரும் தம் இலக்கண நூலிலே இதைச் சொன்னர். வேறு சந்தர்ப்பத்தில் உள்ள இலக்கணப்படி வழுவாகத் தோன்றுவது, இத்தகைய விசேஷ சங்கர்ப்பத்தில் தவருகாது. இப்படி வழுவாகத் தோன்றிலுைம், பொருத்தமாக இருப்பதை வழுவதிை என்று இலக் கணக்காரர் சொல்வார்கள். நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் இறந்தகாலச் சொல்லாலே சொல்லு வதைக் கால வழுவ ைதி என்று குறிப்பார்கள்.

இயல்பான செய்தியையும், தெளிவான செய்தி யையும் புலப்படுத்தும்போது இ ங் த க் கால வழுவமைதி வருவதை ஒரு சூத்திரத்தில் தொல் காப்பியர் எடுத்துச் சொல்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/178&oldid=646304" இலிருந்து மீள்விக்கப்பட்டது