பக்கம்:வாழும் தமிழ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 х வாழும் தமிழ்

'அந்த ஊருக்குப் போனல், சோறில்லாமல் செத்தான்’ என்று சில சமயங்களில் கூறுவதுண்டு. 'இப்போது ஹரித்துவாரத்துக்குப் போனல் தீர்ந்து போனன்” என்று சொல்வதில்லையா? இனிமேல் யாராவது போனல் அவன் சாவான் என்று சொல்வது ச ரி யா ன முறை. ஆனல் இங்கே, போகப் போகிறவன் செத்துப் போய்விட்டான் என்று சொல்வது விரோதமாகத் தோன்றுகிறது. ஆனல் அந்த அந்தப் பிரதேசங்களின் இயற்கையைச் சொல்ல வந்தமையால் இது சரியென்றே கொள்ளவேண்டும்.

"மண்ணத் தின்கிறதா, குழந்தை சரிதான்; கட்டி வந்துவிட்டது.”

'கொடிகாவில் மி ன் னி ன ல் மழை பெய் தாயிற்று.”

“ரூபாய் கையில் இல்லையா? பிச்சைக்காரன் ஆகி விட்டாய்.”

இத்தகைய வாக்கியங்களிலே முடிவான செய்தி இறந்தகாலச் சொல்லிலே வருகிறது. நிச்சயம் இது. நடைபெறும் என்ற தெளிவை அது அழுத்தமாகத் தெரிவிக்கிறது. இப்படி நடக்கும் என்று எதிர் காலத்திலே சொன் ல்ை அதற்கு அத்தனை சுவாரசியம் இராது. இதெல்லாம் முர ண் பா ட் டி .ே ல தோற்றுகிற சுவையையுடைய பேச்சு வகை. -

வேகம், இயற்கை, தெளிவு என்பது போல இன்ன காரணம் என்று வரையறுக்க முடியாமலே காலத்தைக் குறிக்கும் சொற்கள் இப்படி மாறுவ துண்டு. உலக வழக்கிலேதான் இத்தகைய விநோதங் களைக் காணலாம். அந்தப் பேச்சை அப்படி அப்படியே கேட்டுப் பொருள் செய்து சுவைக்கவேண்டும். தனித் தனியே பிரித்துப் பார்த்து, இது இறந்தகாலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/179&oldid=646306" இலிருந்து மீள்விக்கப்பட்டது