பக்கம்:வாழும் தமிழ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வாழும் தமிழ்

'இப்போது இப்படிக் கல்யாணத்துக்கே பதின. யிரம் செலவழித்துவிட்டாயே காளைக்குக் கார்த்திகை வந்தது; அப்போது என்ன செய்யப் போகிருய்? பொங்கல் வருகிறது; அப்போது பணத்துக்கு எங்கே டோகிறது? .

கால த் தி ன் இலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் அயர்ந்து மறந்த சமயத்திலே, “நாளேக்குக் கார்த்திகை வந்தது; பொங்கல் வருகிறது” என்று பையன் சொல்லிவிட்டால் அவர் பிரம்புக்கு வேலே வைக்கும்படி ஆகிவிடும். ஆளுல் மேலே சொன்ன பேச்சு கித்தியப்படி வாழ்க்கையிலே வருவது. அது கால இலக்கணத்துக்கு விரோதமாகக் தோன்றினுலும் மொழியின் இலக்கணத்தோடு ஒட்டியதுதான்; அது கால வழுவமைதி,

“இப்படியெல்லாம் செய்கிருயே; நாளேக்கு அவன் வழக்குத் தொடுத்தான்; நீ என்ன செய்வாய்?’இப்படி உள்ள பேச்சை நாம் எத்தனே எத்தனேயோ கேட்கிருேமே தொல்காப்பியர் காலத்திலே இப்படி யெல்லாம் பேசினர்கள் என்பதை அவர் வகுத்த இலக்கணத்தினுல் ஊகித்துக்கொள்கிருேம். அவர் இயற்றிய சூத்திரத்துக்கு உரை வகுத்த உரை யாசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த, தங்கள் காலத்தில் காதிலே விழும் உதாரணங்களேக் காட்டு கிருர்கள். அவற்றில் சிலவற்றைப் பாருங்கள்.

"இவர் பண்டு பொழிவிடத்து விளையாடுவர்.”

நாளே அவன் வாளொடு வெகுண்டு வந்தான்; பின் நீ என் செய்குவை?

வேகத்தைக் குறிக்கும்போது இறந்த காலத்தைக் குறிக்கும் சொல் வருமென்பதற்கு கச்சினர்க்கினியர் உதாரணம் காட்டி விளக்குவதைப் பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/181&oldid=646310" இலிருந்து மீள்விக்கப்பட்டது