பக்கம்:வாழும் தமிழ்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சிலே பொடி 175.

அப்படிச் சொல்லுகிருய்' என்று சிறிது கோபத் தொனியோடு பேசினேன்.

'பின்னே அவர் அப்படி ஏன் சொன்னர் அவர் பேச்சிலே பொடிவைத்துப் பேசினது உங்களுக்குத் தெரியவில்லேயா? வந்தாலும் வருவேன் என்று சொல்லுகிறபோதே அது தெரிந்திருக்க வேண்டுமே! வராமல் இ ரு ங் தா லும் இருப்பேன் என்று தெரிவிக்கவே, அப்படிப் பொடிவைத்துச் சொல்லி யிருக்கிருர்’ என்று ஒரு போடு போட்டாள் என்

மனேவி,

அப்போது நான் அந்தப் பொடிப்பேச்சைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன். ஆம், அவள் சொல்வது கியாயங்தானே? வந்தாலும் வருவேன் என்று அவன் சொன்ன வார்த்ைதகளிலே இபாடி இருக்கத்தானே இருக்கிறது?’ என்று யோசித்தேன்.

அடுத்த சிந்தனையலே உலக நிகழ்ச்சிகளிலிருந்து தமிழ் மொழியை மோதிற்று. அந்தப் பொடி எங்கே இருக்கிறது? வருவேன் என்பதில் இல்லே. வங்தாலும் என்பதில்தான் இருக்கிறது. அதிலும் முன் பகுதியில் இல்லே வந்தாலும், வந்தால்-உம் ஆம், உ.ம்..ஆம் இந்த உம் என்பதுதான் அந்தப் பொடி!' என்று தெரிந்துகொண்டேன். அது வராமலும் இருப்பேன்’ என்ற கருத்தை உள்ளடக்கி கிற்கிறது என்பதும் தெரியவந்தது.

శ 肇 غيد မွီဒီး

ஊரிலே சினிமாக் கொட்டகை புதிதாகப் போட் டிருந்தார்கள். ஒரே கூட்டம். சிறு பையன் களெல்லாம் வீட்டிலே காசைத் திருடிக்கொண்டு ஒருவருக்கும் தெரியாமல் போய்ச் சினிமாப் பார்த்து வங்தார்கள். செட்டியார் தம்முடைய குமாரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/184&oldid=646317" இலிருந்து மீள்விக்கப்பட்டது