பக்கம்:வாழும் தமிழ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“380 வாழும் தமிழ்

உம்மை மாத்திரமன்றி வேறு பொடிகளும் உண்டு. அவனே, நீயோ யாராவது போங்கள்' என்பதில் திட்டமாகச் சொல்லாமல் ஐயமாக வைக்கிறது ஓ என்ற பொடி, 'இவனே அவ்வள வையும் தின்றுவிட்டான்' என்பதில் மற்றவர்களே விலக்கி ஒருவனேயே சுட்டுகிறது ஏ என்ற பொடி, என, என்று, மன், கொல், தில் என்று பல பொடிகள் உண்டு.

இவை மற்றச் சொற்களோடு சேர்ந்து பொருள் களை விளக்குகின்றன. இவற்றை இடைச்சொல் என்று இலக்கணம் சொல்லுகிறது. சொல்லுக்கு இடை பீலேயும் இறுதியிலேயும் முதலிலேயும் கின்று காலம், பால், இடம் முதலியவற்றைக் குறிக்கும் சொற்கள் கூட இடைச் சொல் வரிசையில் சேர்ந்தனவே. முதலி என்று சொல்வதைக் காட்டிலும் முதலியார் என்று சொல்வது மரியாதையைக் குறிக்கிறது. அங்கே 'ஆர்' என்ற இடைச்சொல் அந்த மரியாதையைப் புலப்படுத்த வருகிறது. .

சின்னஞ் சிறிய சொற் பகுதியாக இருந்தாலும் தேரைத் திருப்புகிற முட்டுக்கட்டை போல வாக்கியத்தின் பொருளையே மாற்றிவிடுகிறது இடைச் சொல். வங்கான் என்பதற்கும், வங்காள் என்பதற்கும் சொல்லளவில் ஓர் எழுத்தே வித்தியாசம். ஆனல் பொருளில் எத்தனை வித்தியாசம் இதைச் செய்வது சொல்விலே பாலே உணர்த்தும் விகுதியாகிய இடைச் சொல், சென்றேன், செல்வேன் என்ற இரண்டிலும் தொழில் மாறவில்லை. ஆளும் மாறவில்லே. ஆனல் காலம் மாறுகிறது; அதைத் தெரிவிப்பவை இடையில் உள்ள இடைநிலையாகிய இடைச் சொற்கள்.

இந்த இடைச்சொற்களைப்பற்றிய இலக்கணங் களே விரிவாகத் தொல்காப்பியர் இடையியல் என்ற பகுதியில் சொல்லியிருக்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/189&oldid=646329" இலிருந்து மீள்விக்கப்பட்டது