பக்கம்:வாழும் தமிழ்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு விசித்திரங்கள் - 17s

விளக்கியது. அந்த மறுப்பை எதிர்மறை என்றும் சொல்லலாம். -

செட்டியார் செய்த விசாரணையிலே, 'நானும் போனேன்” என்று கிடைத்த பதிவிலிருந்து முன்னலே போனவர் சிலர் உண்டு என்ற விஷயம் தெரிய வந்தது. அந்த உம் முன் கடந்த இறந்த காலச் செய்தியைத் தழுவி நிற்கிறது. -

வேலேக்காரியின், காயும் தொடாது' என்ற பேச்சிலே இழிவைப் புலப்படுத்தும் பொடியாக 'உம்' இருக்கிறது. ... -

'நாலு பேரும்’ என்ற பேச்சிலே அதற்குமேல் இல்லே, அதுதான் முழுத் தொகை என்பதை 'உம்' தெரிவிக்கிறது. -

'உம்' என்ற பொடியை இலக்கணக்காரர்கள் உம்மை என்று சொல்வது வழக்கம். நண்பன் வார்த்தையில், வராமல் இருப்பானென்ற கருத்தைத் தெரிவித்த உம்மையை எதிர்மறை உம்மை என்று சொல்வார்கள். செட்டியார் துப்பறிய உதவி செய்த உம்மையை இறந்தது தழீஇய எச்ச உம்மை என் து சொல்வார்கள். வேலேக்காரி வாக்கில் வந்ததோ இழிவு சிறப்பும்மை என்ற பெயரைப் பெறும், வாத்தியார் அனேவரும் வந்ததைக் குறிப்பித்த உம்மை முற்றும்மை எனப்படும்.

உம்மை இந்த அளவோடு கிற்கவில்லே. உங்கள் முப்பாட்டலுைம் முடியாது, அதைச் செய்ய” என்ற வாக்கியத்தில் அந்தக் காரியத்தின் உயர்வைக் காட்ட உம்மை வருகிறது. இது உயர்வு சிறப்பும்மை. இப்படி எட்டுக்கு மேற்பட்ட அர்த்தங்களேத் தெரிவிக்க இந்தப் பொடிச் சொல் உபயோகப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/188&oldid=646326" இலிருந்து மீள்விக்கப்பட்டது