பக்கம்:வாழும் தமிழ்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.84. வாழும் தமிழ்

சொல்லும், கள் என்ற இடைச் சொல்லும் சேர்ங். துள்ளன. மரம் என்பதைத் தனியே பிரித்துச் சொன்னலும் அதனுலே குறிக்கப்படும் பொருளைக் காணலாம். கள் என்பது அத்தகையதன்று. 'ஒரு மரமன்று, பல மரம்' என்ற பொருளேக் காட்ட அது வருகிறது; ஆனால் 'கள்' என்ருலே பல மரம் என்ற பொருள் வராது. கள் என்பதற்கு அர்த்தம் உண்டு; ஆயினும் அதனுல் சுட்டப்படும் தனிப்பொருள் ஒன்று இல்லே. -

ஒரு மங்கை தன் கழுத்தில் தாலி கட்டிக்கொண் டிருக்கிருள், அவள் கழுத்தில் தாலி ஏறுவதற்குமுன் அவள் கன்னிப் பெண்ணுக இருந்தாள். தாலி ஏறின பிறகு அவள் மனைவி என்ற கிலேக்கு வந்தாள். கன்னி மனைவியாகி விட்டாள் என்பதை காம் தாலியினலே அறிகிருேம். கணவனே உடையவள் என்ற செய்தி அவளேக் கண்டவுடனே தெரியவருகிறது. அவள் கழுத்தில் மீண்டும் தாலி இல்லாமல் போய்விடுகிறது. தாலி இல்லாமையால் கணவனும் இல்லையென்று தெரிந்து கொள்கிருேம். தாலி இருக்கும் போது கணவன் இருப்பதும், தாலி இல்லாதபோது கணவன் இல்லாததும் புலனுவதை வைத்துக் கொண்டு. தாலியையே கணவனுக நினைத்து விடலாமா? இடைச் சொல் அங்த நிலையில்தான் இருக்கிறது. போ என்ற வினைச்சொல் இடைச் சொற்களோடு சேர்ந்து 'போனன் என்று ஆகிறது. போ என்பதற்கும் போனன் என்பதற்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு. முதல் சொல்லில் தொழில் மாத்திரம் இருக் கிறது. போனன் என்பதிலோ போகிற ஆடவன், அங்தத் தொழில் 5டங்த காலம் இரண்டும் அதிகமாகச் சேர்ந்திருக்கின்றன. அந்த இரண்டையும் தெரிவிக்க இரண்டு இடைச்சொற்கள் வந்திருக்கின்றன. போதல் என்னும் தொழிலைச் செய்தவன் ஒர் ஆண் மகன் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/193&oldid=646338" இலிருந்து மீள்விக்கப்பட்டது