பக்கம்:வாழும் தமிழ்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை உலகத்து வார்த்தைகள் 185,

பதை, 'ஆன்” என்ற இடைச் சொல் தெரிவிக்கிறது; சொல்லின் உறுப்பாகிய அதற்கு விகுதி என்று பெயர். தொழில் நிகழ்ந்த காலத்தை, போ என்பதற்கும் ஆன் என்பதற்கும் இடையிலே நிற்கும் ‘ன்’ என்ற இடைச் சொல் காட்டுகிறது. அங்த உறுப்புக்கு இடைநிலை என்று பெயர். ஆன் என்பது ஆடவனேக் குறிக்க வங்த அடையாளமே தவிர, அதுவே ஆடவன் என்ற பொருளுக்கு உரிய பெயர் ஆகாது. அதனுல்தான் இடைச் சொல்லுக்கு அர்த்தம் உண்டே ஒழிய அதனல் நேர்முகமாகத் தெரியவரும் பண்டம் இல்லே யென்று. முன்பு சொன்னேன்.

நாலாவதாக வருவது உரிச்சொல். இடைச்சொல் பெயரோடும் வினையோடும் சம்பந்தப்பட்டு வரும். உரிச்சொல் அவ்வாறு சம்பந்தப்பட்டு வருவதோடு அதுவே பெயராகவும் வினையாகவும் நிற்பது உண்டு. முன்னலே சொன்ன கருத்துப்பொருளைக் குறிக்கும் சொற்களே பெரும்பாலும் உரிச்சொல் என்ற பாகு பாட்டில் அடங்கும். -

ஒரு மொழியின் வளப்பத்தையும் அதனைப் பேசுவோரது சிந்தன சக்தியையும் உரிச்சொற்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப காலத்தில் உரிச்சொற்கள் மற்றவற்றை நோக்கச் சிலவாகத்தான் இருக்கும். ஆகையால் பழைய காலத்தில் அவற்றை, அறிஞர்கள் தொகுத்து வைத்தார்கள். சிங்தனை உலகத்திலே நடமாடுபவர்கள் அவர்கள். இலக்கண ஆசிரியர்கள் அந்த ஆரம்ப காலத்தில் மற்றச் சொற்களுக்கு இலக்கணம் சொன்னர்கள். மொழியில் வரும் கருவிகளாகிய இடைச்சொல்லேத் தொகுத்து உரைத்தார்கள். அப்படியே கருத்துப் பொருளைக் குறிக்கும் சொற்களைத் த னியே தொகுத்துச் சொன்னர்கள். வரவர அ ப் படி ச் சொல்வது. சம்பிரதாயமாகி விட்டது. உரியியல் என்ற பகுதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/194&oldid=646340" இலிருந்து மீள்விக்கப்பட்டது