பக்கம்:வாழும் தமிழ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வாழும் தமிழ்

உரிச்சொல்லின் இலக்கணத்தைச் சொல்வதோடு நில்லாமல் உரிச்சொற்களைத் தொகுத்துக் காட்டு வதும் இலக்கண ஆசிரியர்களுக்கு வழக்கமாயிற்று. தொல்காப்பியரும் அ ங் த ச் சம்பிரதாயத்தைப் பின்பற்றி உரியியலில் உரிச்சொற்களே எடுத்துச் சொல்கிருர்,

கருத்துப் பொருளுக்கு உரிய சொல் உரிச்சொல் என்று இருந்தது. வரவர அதனோடு தொடர்புடைய வற்றைக் குறிக்கும் சொற்களும் உரிச்சொற்கள் ஆயின. பிறகு பண்டத்தை நினைக்காமல் சொல்லே மாத்திரம் நினைக்கும்போது எல்லாமே உரிச்சொல் என்ற கி லே வங்தது. வாக்கியங்களில் வரும் சொற்களில் வேறுபாடு உண்டு; அப்படி இல்லாமல் அகராதியிலே உள்ள சொற்கள் யாவும் உரிச்சொல் என்று கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. ஒரு நிகண்டுக்கே, உரிச்சொல் நிகண்டு என்று பெயர் உண்டு. -

தொல்காப்பியர் கூறும் உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு என்ற மூன்று வகையிலே அடங்கும், அவர் காட்டும் சொற்கள் பல, இக்காலத்திலே வழங்கவில்லை. சிந்தனே உலகத்துச் சொற்களாக கின்ற உரிச்சொல்லோடு புலவர் உலகத்திலே மாத்திரம் வழங்கும் திரிசொற்களேயும் உரிச் சொல்லாகப் பிற்காலத்தார் இலக்கணம் கூறினர்.

கிலேயில்லாமல் சில காலத்துக்கு வழங்கும் ஒன்றைக் குறிக்கத் தனித் தமிழ்ச் சொல்லாக ஒன்றும் இன்றை வழக்கில் இல்லை. தாற்காலிகம் என்ற வடசொல்லேயும், டெம்பரரி (Temporary) என்ற ஆங்கிலச் சொல்லையும் பேச்சில் வழங்குகிருேம். 'வம்பு'என்ற சொல்லுக்கு அங்கப் பொருள் உண்டு. 'வம்பு நிலையின்மை” என்பது தொல்காப்பியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/195&oldid=646342" இலிருந்து மீள்விக்கப்பட்டது